ஒலிம்பிக் விளையாட்டுகளில் மாலத்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிம்பிக் விளையாட்டுகளில் மாலத்தீவு (Maldives at the Olympic Games) முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு கலந்து கொண்டது. ஒவ்வொரு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போதும் தனது நாட்டின் சார்பில் கலந்து கொள்ள தடகள வீரர்களை அனுப்பி வருகிறது. ஆனால், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை மாலத்தீவு கலந்து கொண்டதில்லை.

2015 ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் எந்த பதக்கங்களையும் மாலத்தீவு வெல்லவில்லை.

மாலத்தீவுக்கான தேசிய ஒலிம்பிக் குழு 1985 இல் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவாலும் இக்குழு அங்கீகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]