ஒலிம்பிக் ஏர்
ஒலிம்பிக் ஏர், ஏகன் ஏர்லைன்ஸின் கிளை விமானச் சேவையாகும். 1957 ஆம் ஆண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இது ஒலிம்பிக் ஏர்வேஸ் என்ற பெயருடன் இயங்கி வந்தது. ஒலிம்பிக் ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்திய பிறகு ஒலிம்பிக் ஏர் தனது வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகளை செப்டம்பர் 29, 2009 இல் தொடங்கியது. ஒலிம்பிக் ஏர்லைன்ஸ் தனது விமானச் சேவைகளை அக்டோபர் 1, 2009 இல் முழுமையாக நிறுத்தியது.
ஒலிம்பிக் ஏர் விமானச் சேவையின் முக்கிய மையம் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையம் ஆகும். இது ரோட்ஸ் சர்வதேச விமான நிலையத்தினை இரண்டாம் நிலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இது ஸ்பாட்டாவில் உள்ள ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் கட்டிடம் 57 ஐ, விமானச்சேவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[1][2] அத்துடன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை கோரோபி, க்ரோபி மற்றும் கிழக்கு அட்டிகாவில் கொண்டுள்ளது.
இதன் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அமைப்பிற்கான குறியீடு OA ஆகும். இது ஒலிம்பிக் ஏர்லைன்ஸ் எனும் பெயரில் இருந்து தருவிக்கப்பட்டது. இதன் சர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கான குறியீடு OAL ஆகும். முதலில் சர்வதேச பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கான குறியீடு NOA ஆக இருந்தது பின்னர் ஒலிம்பிக் ஏர்லைன்ஸ் என்பதால் OAL என்று வாங்கப்பட்டது. பிப்ரவரி 22, 2010 இல் ஒலிம்பிக் ஏர் மற்றும் அதன் போட்டியாளரான ஏகன் ஏர்லைன்ஸ் இருவரும் ஒன்றிணைவதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், ஏகன் பெயருடன் அதன் பின்பு செயல்படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த ஒன்றிணைப்பு ஜனவரி 26, 2011 இல் தடை செய்யப்பட்டது.
இருப்பினும், அக்டோபர் 10, 2013 இல் ஏகன் ஏர்லைன்ஸ் ஒலிம்பிக் ஏர் நிறுவனத்துடன் பங்களிப்பு அளித்தது ஒப்புக்கொள்ளப்பட்டு, ஏகன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக செயல்பட்த் தொடங்கியது.[3][4] தற்போது ஒலிம்பிக் ஏர், 14 பாம்பார்டியர் டேஷ் 8 ரக விமானங்களை செயல்படுத்துகிறது.
உயர்தர வழித்தடங்கள்
[தொகு]தெஸலோனிக்கி – ஏதென்ஸ், ஏதென்ஸ் – தெஸலோனிக்கி, ஏதென்ஸ் – மிகோனோஸ் மற்றும் ஏதென்ஸ் – திரா ஆகிய வழித்தடங்களை ஒலிம்பிக் ஏர் உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 60, 56, 55 மற்றும் 51 விமானங்களை ஒலிம்பிக் ஏர் நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை ஏதென்ஸ் - நான்டேஸ் மற்றும் நான்டேஸ் – ஏதென்ஸ் வழித்தடங்களில் இயக்குகிறது.[5]
இலக்குகள்
[தொகு]செப்டம்பர் 10, 2015 இன் படி ஒலிம்பிக் ஏர் 18 இடங்களை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது.[6]
வரையறுக்கப்பட்ட இலக்குகள்
[தொகு]- அலெக்ஸாண்ட்ரோபௌலி - அலெக்ஸாண்ட்ரோபௌலிஸ் சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- அஸ்டைபலைய – அஸ்டைபலைய ஐலாண்ட் தேசிய விமான நிலையம்
- ஏதென்ஸ் - ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையம் Hub
- செபோலினியா - செபோலினியா சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- சானியா - சானியா சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- சியோஸ் - சியோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- இகேரியா - இகேரியா ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- லோன்னியா - லோன்னியா தேசிய விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- கலைம்னோஸ் - கலைம்னோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- கார்பதோஸ் - கார்பதோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- கஸோஸ் - கஸோஸ் ஐலேண்ட் பொது விமான நிலையம்
- காஸ்டெல்லோரிஸோ - காஸ்டெல்லோரிஸோ விமான நிலையம்
- கவாலா – கவாலா சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- கிதிரா - கிதிரா ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- கோஸ் - கோஸ் ஐலேண்ட் சர்வதேச விமான நிலையம்
- லெம்னோஸ் - லெம்னோஸ் சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- லெரோஸ் - லெரோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- மைலோஸ் - மைலோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- மைடிலினே - மைடிலினே சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- நக்ஸோஸ் - நக்ஸோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- பரோஸ் - பரோஸ் தேசிய விமான நிலையம்
- ரோட்ஸ் - ரோட்ஸ் சர்வதேச விமான நிலையம் Secondary hub
- சமோஸ் - சமோஸ் சர்வதேச விமான நிலையம் (அக்டோபர் 25, 2015 முதல் தொடங்கப்படும்)
- சிடியா - சிடியா பொதுவிமான நிலையம்
- ஸ்கியாதௌஸ் – ஸ்கியாதௌஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- சைரோஸ் - சைரோஸ் ஐலேண்ட் தேசிய விமான நிலையம்
- ஸாகைந்தோஸ் - ஸாகைந்தோஸ் சர்வதேச விமான நிலையம்க
குறிப்புகள்
[தொகு]- ↑ "Olympic Air officially welcomed with full honors the Hellenic Paralympic team." () Olympic Air. 2012. Retrieved on 13 October 2015. "The arrival ceremony in honor of our athletes was held at Olympic Air’s headquarters (Building 57), Athens International Airport, with emotions of great pride and excitement."
- ↑ "Travelair Club -> Partners Terms and Conditions பரணிடப்பட்டது 2013-12-02 at the வந்தவழி இயந்திரம்." () Olympic Air. Retrieved on 13 October 2015. Under "Delta Air Lines" tab: "It is clarified that, boarding pass as well as original ticket must be forwarded as evidence to the following mail address : Olympic Air, Travelair Club department, Athens International Airport, Building 57, 190 19, Spata, Greece."
- ↑ "USA Today – "Aegean Airlines' takeover of Olympic Air gets EU's OK"". usatoday.com. 10 October 2013. http://www.usatoday.com/story/todayinthesky/2013/10/10/aegean-airlines-takeover-of-olympic-air-gets-eu-ok/2957925/. பார்த்த நாள்: 13 October 2015.
- ↑ "Buying Business Travel – "Aegean Finally Seals Olympic Air Purchase"". buyingbusinesstravel.com. 23 October 2013. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "Olympic Airlines Routes". cleartrip.com. Archived from the original on 15 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ "Our Network". olympicair.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.