ஒலிப்பேழை
ரிடிகே டி-60 ஒலிப்பேழை, 60 நிமிட நேரம் இயங்கக்கூடியது | |
ஊடக வகை | காந்த நாடா |
---|---|
குறியேற்றம் | Analog signal |
கொள்திறன் | பொதுவாக ஒரு பக்கத்துக்கு 30 முதல் 45 நிமி வரை. சில 60 நிமி வரை இயங்கும். |
வாசித்தல் தொழிநுட்பம் | Tape head |
பதிவுத் தொழிநுட்பம் | Magnetic recording head |
பயன்பாடு | Audio and data storage |
ஒலிப்பேழை அல்லது ஒலிநாடாப் பேழை (Compact Cassette) என்பது ஒரு ஒப்புமை ஒலிப்பதிவு மற்றும் மறுவாசிப்பு சாதனம். இவை முதலாக சொல்வதெழுதல் சாதங்களுக்காக (Dictation Devices) வடிவமைக்கப்பட்டன. 1970இலிருந்து 1990கள் வரை ஒலிப்பேழை இசைத்தட்டுடன் முன்பதிவு இசையின் மிக பிரபலமான வடிவமமாக அமைந்தது. 2000கள் வர்த்தக ரீதியாக ஒலிப்பேழைகளின் புழக்கம் குறைந்தாலும், தொழில்நுட்ப வல்லுரகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஒலிப்பேழை தொடர்ந்து நீடித்துள்ளது. இந்தியாவில் திரைப்படங்கள் மற்றும் தெய்வீக இசை குறுவட்டுகளுடன் ஒலிப்பேழைகளிலும் இன்னமும் வெளியிடப்படுகின்றன. 1990 உள்ள நிலவரங்களுக்கு ஒப்பிடுகையில் ஒலிப்பேழைகளின் விற்பனை உலக அளவில் கணிசமாகக் குறைந்து, குறுவட்டுகள் ஒலிப்பேழைகளை மிஞ்சியுள்ளன. எனினும், அண்மையில் (2009) ஜப்பானின் TDK நிறுவனம் அதன் வெற்று ஒலிப்பேழைகளின் விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது என அறிவித்தது. மேற்கத்திய இசை வெளியீடுகள் பெரும்பாலுமாக 2003க்கு மேல் நிறுத்தப்பட்டுரிந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக ஒலிநாடவில் மட்டும் வெளியீடு செய்யும் மேற்கத்திய இசைக்குழுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.[1][2][3]
இசைத் தூயவாதிகள் மற்றும் கூர்ந்த இசை ரசிகர்கள் (audiophiles) ஒலிப்பேழையை அதன் ஒப்புமை செயற்கூற்றால் எண்ணியல் இசைக்கோப்புகள் மற்றும் கேட்பொலி குறுவட்டுகளை விட உயர் மதிப்பில் வைக்கின்றனர்.
ஜிம்பாப்வே போன்ற சில நாடுகளில் கலைத்திருட்டை எதிர்கொள்ள ஒலிப்பேழைத் தொழிற்சாலைகளை புதிதாக அமைக்கின்றனர் (2010).
வரலாறு
[தொகு]1958இல் RCA Victor நிறுவனம் இருபிரிப்பிசை காலங்குல இருசுருள் (1/4" stereo reel-to-reel tape) என்பவற்றை அறிமுகப்படுத்தியது. அது பெரிதாக (5" x 7") இருந்ததால் வர்த்தக ரீதியாக தோல்வியுற்றது. 1962 ஃபிலிப்ஸ் நிறுவனம் ஒரு அளவடக்கமான ஒலிப்பதிவு பேழை ஊடகத்தை அறிமுகப்படுத்தியது.
முன்பதிவு இசை ஒலிப்பேழைகளின் திரள் உற்பத்தி 1964இல் ஹானோவர், ஜெர்மனியில் தொடங்கியது. 1980கள் Sony Walkman போன்ற சட்டைப்பையடக்க ஒலிப்பதிவிகளின் அறிமுகத்தால், ஒலிப்பேழைகளின் பிரபலம் மிகவும் அதிகரித்தது.
ஒலிப்பேழைகள் அரசியல் பேச்சுகளைப் பரப்புவதற்கும் ஒரு முக்கியமான ஊடகமாகவும் அமைந்தது.
ஒலிப்பேழை வகைகள்
[தொகு]முதல் வந்த ஒலிப்பேழைகள் நாடாக்கள் இரும்பு மூவிணை உயரிரகம் (Ferric Oxide - Fe2O3) பூச்சால் செய்யப்பட்டவை. 3M நிறுவனம் உயர் ஒலிவீச்சு கொண்ட மென்வெள்ளி நாடா (Cobalt Tape) ஒலிப்பேழைகளை அறிமுகப்படுத்தியது. DuPont நிறுவனம் நீலிரும்பு ஈருயிரக (Chromium Dioxide - CrO2) ஒலிநாடாக்களை அறிமுகப்படுத்தியது.
நான்கு வகைகளான ஒலிப்பேழைகள் உள்ளன. ஒலிப்பேழைகள் இரண்டு அல்லது நான்கு பொளிகள் (notches) அமைந்துள்ளன.
ஒலிப்பேழை செந்தரம் பன்னாட்டு மின்வேதியியல் செயற்குழு (International Electro-chemical Comittee) எனப்படும் செந்தரப்படுத்தல் நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒலிபேழைகளில் இரைச்சல் அளவைக் குறைப்பதற்கு சாருகைக் குறிகை (Bias signal) எனப்படும் உயரலைவெண் குறிகையுடம் இசைக் குறிகை ஒலிப்பதிவின் போது பண்பேற்றப்படுகிறது. இதற்கு முன்வலுவூட்டல் (Pre-emphasis) எனப்படுகிறது. முன்வலுவூட்டல் அளவு ஒலிப்பேழை வகைகளுக்கு மாறும்.
வகை-I
[தொகு]வகை-I ஒலிப்பேழைகளில் வெறும் எழுதல் தடுப்புப் பொளிகள் உள்ளன. இவை வழக்கமான இரும்பு உயரக (Fe2O3) நாடாக்களால் ஆனவை.
வகை-II
[தொகு]வகை-II ஒலிப்பேழைகள் எழுதல் தடுப்புப் பொளிகளுக்கு அருகில் இரண்டு கூடுதல் பொளிகள் உள்ளன. இவை நீலிரும்பு உயிரக (Cr2O3) நாடாக்களைக் கொண்டவை. இவ்விரண்டு பொளிகளும் இரண்டு நடு பொளிகள் சேர்ந்திருந்தால் வகை-IV ஒலிப்பேழை எனப்படுகிறது.
வகை-III
[தொகு]வகை-IIIஇல் நாடாக்கள் இரும்பு-நீலிரும்பு ("ferrichrome") சேர்மானம் கொண்டுள்ளவை. இது 1970களுக்குப் பிறகெ வழக்கொந்திவிட்டது.
வகை-IV
[தொகு]வகை-IV இரும்பு நாடாக்கள் கொண்டுள்ளவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Museum Of Obsolete Media". 19 November 2015. Archived from the original on 3 May 2016. பார்க்கப்பட்ட நாள் 29 April 2016.
- ↑ Dormon, Bob (August 30, 2013). "Are you for reel? How the Compact Cassette struck a chord for millions". The Register (in ஆங்கிலம்). Archived from the original on August 2, 2020. பார்க்கப்பட்ட நாள் August 6, 2022.
- ↑ "Learn about Tabs-In or Tabs-Out shells and leaders". nationalaudiocompany.com. Archived from the original on 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.