உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலாவ் ஜோர்கன் ஹெஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலாவ் ஜோர்கன் ஹெக் (இறப்பு:ஆகஸ்ட் 26, 2005) ஒரு நோர்வே நாட்டின் கடின பிடில் என்ற நாட்டுப்புற இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர் ஆவார். இவர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வரும் நோர்வேயின் நாட்டுப்புற நடனக் கலைஞர் ஆவார்.

அவர் நோர்வேயின் வால்ட்ரெஸ், ஆஸ்ட்ரே ஸ்லைட்ரே என்ற இடத்தில் வளர்ந்தார். அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் பலர் பிடில் இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் என்பதால் இயல்பாகவே இந்த கடின பிடில் (வயலின் போன்ற இசைக்கருவி, ஆனால் வயலின் இல்லை) இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொண்டார். அவரது நாட்டார் நடன பாணியின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வதில் முன்னணியில் இருப்பதாக கருதப்பட்ட அவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக நோர்வே நாட்டுப்புற நடனத்தை ஆடி, பரப்பி வந்துள்ளார். அவர் 1996 ம் ஆண்டு சாகா பரிசு( சாகா-பிரிசென் ) பெற்றவர். மேலும் நார்ஸ்க் ஃபோல்கேமுசிக் டான்செலாக் என்ற முதிர்ந்த நாட்டுப்புற கலைஞரால் தலைமை குரு என்று பெயரிடப்பட்டார். அவர் 1996 இல் மின்னசோட்டாவின், இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படும் மினியாப்பொலிஸ் - செயின்ட் பால் (மினசோட்டா)வில் உள்ள இரட்டைநகரங்களின் கடினப்பிடில் கலைக்குழு என்ற நாட்டுப்புற இசைக்குழுவையும் நிறுவியுள்ளார். பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய பிடில் போட்டிகளின் நடுவராக பங்களித்து இந்த கலையின் மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களை கண்டறிந்துள்ளார், மேலும் ஒசுலோ பல்கலைக்கழகம் மற்றும் வோஸில் உள்ள ஓலே புல் கல்விக்கூடம் ஆகியவற்றில் இந்த கடின பிடில் இசைக்கருவியை கற்பித்தும் வந்துள்ளார். [1]

ஓலாவ் மற்றும் அவரது மனைவியான மேரி சான்ஃபோர்ட் ஹெக், இருவரும் இணைந்து நார்வே மற்றும் செயின்ட் பால், மின்னசோட்டா ஆகிய நகரங்களுக்கு ஆண்டு முழுவதும், குறிப்பிட்டு சொல்லப்போனால் ஓலாவ் ஆகஸ்ட் 26, 2005 அன்று இறக்கும் வரை பயணித்து நடனக்கலையை கற்றுக்கொடுத்துள்ளனர்.  இன்னமும் மேரி அமெரிக்கன் ஸ்வீடிஷ் நிறுவனம் மற்றும் டேப்ஸ்ட்ரி நாட்டுப்புற நடன மையத்திலும் தொடர்ந்து நடனம் மற்றும் இசையை கற்பித்து வருகிறார். [2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Twin Cities Hardingfelelag (noram.norway.com)". Archived from the original on 2011-01-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  2. "Olav Jørgen Hegge and Mary S. Hegge (Hardanger Fiddle Association of America)". Archived from the original on 2021-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலாவ்_ஜோர்கன்_ஹெஜ்&oldid=3684746" இலிருந்து மீள்விக்கப்பட்டது