உள்ளடக்கத்துக்குச் செல்

ஒற்றை வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைகீழ் பிம்பத்தை உருவாக்கும் ஒரு ஒற்றை குவி வில்லை

ஒற்றை வில்லை (simple lens) என்பது ஒளியியலில் தனியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வில்லையாகும். உருபெருக்கும் கண்ணாடி மற்றும் படிக்க உதவும் கண்ணாடிகள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[1]

ஒற்றை வில்லைகள் பல வகை பிறழ்ச்சிகளைக் (aberrations) கொண்டுள்ளதால், இவை ஒளிப்படக்கருவி வில்லைகளில் தெளிவான பிம்பங்களை உருவாக்க உதவுவதில்லை. இவை சீரொளி போன்ற நிறப்பிறழ்ச்சியும் கோளப்பிறழ்ச்சியும் குறைவாகவுள்ள ஒற்றை நிற ஒளி மூலங்களில் மட்டுமே இவை பயன்படுகிறது.

குறிப்பிட்ட குவியத் தூரம் கொண்ட வில்லைகளைப் பயன்படுத்தும் புகைப்பட கருவியில் மட்டுமே ஒற்றை வில்லைகள் பயன்படுத்தப்படுகிறது. புகைப்படக்கருவியில் உள்ள துளை சிறியதாகவும், பிறழ்ச்சிகளைத் தவிர்க்கும் வகையில் புகைப்படச் சுருள்கள் சற்று வளைந்தபடி அமைக்கப்பட்டிருக்கும். ஈஸ்ட்மேன் கோடாக் போன்ற புகைப்பட கருவிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றை_வில்லை&oldid=2749478" இலிருந்து மீள்விக்கப்பட்டது