ஒற்றைப் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றைப் புளோரைடு (Monofluoride) என்பது ஒரு வாய்ப்பாட்டு அலகிறகு ஒரு புளோரைடைக் கொண்டிருக்கும் வேதியியல் சேர்மத்தைக் குறிக்கும். ஓர் இரும சேர்மத்திற்கு, XF என்பது வாய்ப்பாடாகும். மோனோ புளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

கரிமபுளோரின் சேர்மங்கள்[தொகு]

பொதுவாக மெத்தில் புளோரைடு மற்றும் புளோரோபென்சீன் போன்ற கரிமபுளோரின் சேர்மங்கள் ஒற்றை புளோரைடுகளாகக் கருதப்படுகின்றன.

கனிமச் சேர்மங்கள்[தொகு]

அனைத்து கார உலோகங்களும் ஒற்றைப் புளோரைடுகளை உருவாக்குகின்றன. அனைத்தும் சோடியம் குளோரைடு (பாறை உப்பு) கட்டமைப்பைக் கொண்டவையாக உள்ளன. தண்ணீரிலும் சில ஆல்ககால்களிலும் கரையக்கூடியவையாகவும் உள்ளன.[1] புளோரைடு அயனி அதிக காரத்தன்மை மிக்கது என்பதால் பல உலோகப் புளோரைடுகள் MHF
2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட பைபுளோரைடுகளாக உருவாகின்றன. சோடியம் மற்றும் பொட்டாசியம் பைபுளோரைடுகள் வேதித் தொழிலில் குறிப்பிடத்தக்கவையாகும்.[2] மற்ற ஒற்றைப் புளோரைடுகளில் , வெள்ளி[3] மற்றும் தாலியம்[4] புளோரைடுகள் மட்டுமே நன்கு வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மற்ற உலோக ஆலைடுகள் போலில்லாமல் ஒற்றை புளோரைடுகள் நன்கு கரைகின்றன.

சில கனிம ஒற்றைப் புளோரைடுகள்[தொகு]

உலோக ஒற்றைப் புளோரைடுகல்[தொகு]

அலோக ஒற்றைப் புளோரைடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aigueperse et al. 2005, "Fluorine Compounds, Inorganic," pp. 25–27.
  2. Aigueperse et al. 2005, "Fluorine Compounds, Inorganic," pp. 26–27.
  3. Milne, George W. A. (2005). Gardner's commercially important chemicals. John Wiley and Sons. பக். 553. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-73518-2. https://archive.org/details/gardnerscommerci0000unse. 
  4. Arora, M. G. (2003). P-block Elements. Anmol Publications. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7488-563-3. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைப்_புளோரைடு&oldid=3848949" இலிருந்து மீள்விக்கப்பட்டது