ஒரே விளைவு-ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரே விளைவு-ஏற்பளவு (ஆங்கில மொழி: Isoeffective dose) என்பது பன்னாட்டு கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையத்தின் (International Commission on Radiological Protection) கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளவை அளவு.[1] அயனியாக்கும் பண்புடைய மின்காந்தக் கதிர்கள் உடலில் பல விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. ஒரேமாதிரியானப் பாதிப்பை அல்லது சேதத்தினை தோற்றுவிக்கும் கதிர் ஏற்பளவு, ஒரேவிளைவு கதிர் ஏற்பளவு எனப்படும்.

எடுத்துக்காட்டிற்காக குருதியில் செங்குருதியணு, வெண்குருதியணு, சிறு தட்டுகள், இசினோபில் போன்றவைற்றில் தோன்றும் விளைவுகளைக் கூறலாம். வெவ்வேறு ஏற்பளவுகளில், மேற்குறிப்பிட்ட குருதிக்கூறுகளில் 50% சேதத்தினை ஏற்படுத்தும் பல ஏற்பளவுகள், ஒரேவிளைவு ஏற்பளவு எனப்படும்.

இதுபோல் ஒரே ஏற்பளவு விளைவு (Isodose effect) என்பது ஒரே ஏற்பளவில் தோற்றுவிக்கப்படும் பல்வேறு விளைவுகளைக் குறிக்கும்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_விளைவு-ஏற்பளவு&oldid=2747430" இருந்து மீள்விக்கப்பட்டது