ஒரே கடல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரே கடல்
இயக்கம்ஜியாம பிரசாத்
இசைஓசப்பச்சன்
நடிப்புமம்மூட்டி
மீரா ஜாஸ்மின்
நரேன்
ரம்யா கிருஷ்ணன்
வெளியீடுஆகத்து 27, 2007 (2007-08-27)
ஓட்டம்100 minutes
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஒரே கடல் (Ore Kadal) இது 2007 ஆண்டு மலையாள மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படத்தின் கதையை எழுதி இயக்கியவர் ஜியாம பிரசாத் என்பவர் ஆவர். இப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை ஓசப்பச்சன் என்பவர் பெற்றார். இப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் கதைக்கரு வங்காள மொழி எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயா என்பவர் எழுதிய கதையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.[1]

கதை[தொகு]

52 வயதுடைய விருதுபெற்ற எழுத்தாளரான நாதன் (மம்மூட்டி) என்பவர் அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டவராக, கல்யாணமே செய்துகொள்ளாதவறாக வாழ்ந்துவரும் குடியிருப்பில் வேலைதேடும் கணவனான ஜெயகுமர் (நரேன்) என்பவரின் மனைவி தீப்தி (மீரா ஜாஸ்மின்) ஒரு குழந்தையுடன் வாழுகிறாள். தன் கணவனுக்கு வேலை வாங்கித்தரும்படி நாதனிடம் தீப்தி கேட்கிறாள் அவனும் வேலை வாங்கித்தருகிறார். அந்த நட்பில் தீப்தி நாதனின் வேட்டிற்குச் சென்று தனக்கும் வேலைவாங்கித்தரும்படி காட்கிறாள். அபோது இருவருக்குள்ளும் ஏற்பட்ட மன சலனத்தால் இருவரும் சேர்ந்து விடுகிறார்கள். இதன் காரணமாக அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன் பின் அவள் மனநிலை சரியில்லாதவளாக மாறி பின்னர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்புகிறாள். தன்னால் நாதனின் நினைவை மனதிலிருந்து அழிக்க முடியாத தீப்தி அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறாள்.

கதை மாந்தர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

2007ஆம் ஆண்டு அகத்து மாதம் 27 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_கடல்_(திரைப்படம்)&oldid=3334619" இருந்து மீள்விக்கப்பட்டது