ஒரேமைய அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரேமைய அமைப்பு ( Isocentric Mount ) என்பது தொலைக்கதிர் மருத்துவத்திற்கான கிளினாக், லினாக் மற்றும் கோபால்ட் 60 கொண்ட கருவிகளில் உள்ள ஒரு சிறப்பான எந்திரவியல் அமைப்பாகும். இங்கு ஒரே மையம் என்பது எந்திரத்தின் தலை சுழலும் அச்சும் (Axis of rotation of the head), புலத்தேர்வியிலிருந்து வெளிப்படும் கற்றையின் மைய அச்சுக் கோடும், (Axis of rotation of the collimator) நோயாளி இருக்கும் மேசையின் சுழல் அச்சும் (Axis of rotation of the couch) ஆக இந்த மூன்று அச்சுகளும் இணையும் ஒரு புள்ளியாகும். இப்புள்ளி கதிர்மூலம்-அச்சுத் தொலைவில் (SAD) இருக்கிறது. புற்றுத்திசு இப்புள்ளியில் இருக்குமாறு சீராக நோயாளியினை இருக்கச்செய்து, பின் கருவியின் தலைப்பகுதியினையோ புலத்தேர்வியினையோ அல்லது மேசையினையோ திருப்பினாலும் வெளிப்படும் கதிரின் மைய அச்சு புற்றுவழியாகவே செல்லும். இந்த அமைப்பே ஒரே மைய அமைப்பு எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரேமைய_அமைப்பு&oldid=3596792" இலிருந்து மீள்விக்கப்பட்டது