ஒரு லிட்டர் ஒளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு லிட்டர் ஒளி
வகைஇலாப நோக்கற்றது, ஆர்வலர் குழு
தலைமையகம்மணிலாவில் உலகளாவியத் தலைமையகம்

சுவிட்சர்லாந்தில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு

கொலொம்பியாவில் தென்னமெரிக்க ஒருங்கிணைப்பு
வேலைசெய்வோர்இல்லாக் டியாசு, நிறுவனர்
சேவைகள்தாங்கத்தகு மற்றும் நிலைநிறுத்தற்தக்க ஒளி
இணையத்தளம்aliteroflight.org

ஒரு லிட்டர் ஒளி (Liter of Light) என்பது மின்சார அணுக்கம் கிட்டாத அல்லது வாங்கவியலா பிற்பட்ட குடும்பங்களுக்கு சூழலுடன் இயைந்த, பொருளாதாரப்படி நிலைநிறுத்தற்தக்க, ஒளி மூலத்தை வழங்கும் நோக்கம் கொண்ட உலகளாவிய கட்டற்ற மூல இயக்கமாகும். இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் எளிதானது. 1.5 லிட்டர் பெட் போத்தலில் தூய்விக்கப்பட்ட நீரையும் பாசி படிவதைத் தடுக்க வெளுப்பானையும் நிரப்பி வீட்டுக் கூரைகளில் நிறுவுவதாகும். போத்தலின் உள்ளே உள்ள நீர் சூரியஒளியை முறித்து 55 வாட் மின்குமிழுக்கு இணையான வெளிச்சத்தைத் தருகிறது. சரியானப் பொருள்களைப் பயன்படுத்தி சரியாக நிறுவப்பட்டால் இந்த சூரிய போத்தல் 5 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும்.[1][2] இந்த ஒளி அமைப்பு சூரிய ஒளியை நாடி இருப்பதால் பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் பகல் வெளிச்ச நேரங்களில் மட்டுமே ஒளி வழங்க இந்த ஏற்பாடு அமைக்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

பகல் ஒளிக்காக நெகிழிப் போத்தல்களை பயன்படுத்தும் எண்ணக்கருவை முதன்முதலாக பிரேசில் நாட்டு ஆல்பிரடோ மோசர் 2002இல் வெளிப்படுத்தினார்.[3] இந்தத் தொழினுட்பத்தை சமூக இயக்கமாக முதன்முதலில் பிலிப்பைன்சு நாட்டில் இல்லாக் டியாசு தனது மைசெல்ட்டர் என்ற நிறுவன அமைப்பு மூலம் 2011இல் செயல்படுத்தினார்.[4] இந்த எண்ணக்கருவை நிலைநிறுத்தற்கூடிய அளவில் வளர்க்க இந்த அமைப்பு “உள்ளூர் தொழில்முனைவர்” வடிவத்தை செயலாக்கியது. இதன்படி போத்தல் குமிழ்கள் உருவாக்கலும் நிறுவலும் உள்ளூர் முனைவர்களிடம் விடப்பட்டது; இதன்மூலம் சிறு வருமானமும் அவர்களுக்குக் கிட்டியது. சில மாதங்களிலேயே, ஒரு தச்சரும் ஒரு கருவிப் பெட்டியும் கொண்டு லகுனாவின் சான் பெட்ரோ சமூகத்தினர் 15,000 போத்தல் குமிழ்களை 20 நகரங்களில் நிறுவினர். இது பிலிப்பைன்சின் மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கமூட்டியதோடன்றி உலகளாவிய அளவில் விரிவுபடுத்தவும் வழி வகுத்தது.[5] மைசெல்ட்டர் அமைப்புஒரு பயிற்சி மையத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பிற குழுக்களுக்கும் பயிலரங்குகளை நடத்தியது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "10,000 Dirt Cheap and Life-Altering Plastic Lamps Installed in Manila Slums | Inhabitat - Sustainable Design Innovation, Eco Architecture, Green Building". Inhabitat. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.
  2. "Bringing light to the poor, one liter at a time | Video | Reuters.com". Uk.reuters.com. Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. BBC News article about Alfredo Moser and his invention
  4. "A Liter of Light Goes a Long Way (by Ami Valdemoro) | Harvard Students Talk Rio+20". Riomatters.wordpress.com. 2012-06-06. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
  5. "A Litre of Light". Unfccc.int. பார்க்கப்பட்ட நாள் 2012-10-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_லிட்டர்_ஒளி&oldid=3546991" இலிருந்து மீள்விக்கப்பட்டது