ஒரு நாடு, ஒரே சட்டத்திற்கான பணிக்குழு (இலங்கை)
இலங்கையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கருத்தியலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவை உருவாக்க 13 பேர் கொன்ட அதிபரின் பணிக்குழ, பொது பல சேனாவின் தலைவர் தேரவாத பௌத்த பிக்கு கலகொடாத்தா ஞானசார தேரர் தலைமையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் 26 அக்டோபர், 2021 அன்று வெளியிடப்பட்ட ஒரு அரசானை (வர்த்தமானி) படி நிறுவப்பட்டது.[1] [2]இந்த செயலணியில் 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் உள்ள போதிலும், தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.[3] செயலணியின் முன்னேற்றம் குறித்து மாதாந்திர அறிக்கைகளை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்கப்படும். இறுதி அறிக்கை 28 பிப்ரவரி 2022 நாளுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முன்னதாக ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற கருத்து இலங்கை பொதுசன முன்னணியால் முன்வைக்கப்பட்டது.
தமிழர்கள் சேர்ப்பு
[தொகு]6 நவம்பர் 2021 நாளிட்ட அரசு வர்த்தமானி அறிவித்தலில், இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகிய மூவர் இந்த செயலணியில் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]