ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்
இயக்கம்பி. ஆறுமுககுமார்
தயாரிப்புகணேஷ் காளிமுத்து
இரமேஷ் காளிமுத்து
பி. ஆறுமுககுமார்
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிஜய் சேதுபதி
கௌதம் கார்த்திக்
நிகரிக்கா
காயத்ரி
ஒளிப்பதிவுசிறீ சரவணன்
படத்தொகுப்புஆர். கோவிந்தராஜ்
வெளியீடு02 பிப்ரவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் (Oru Nalla Naal Paathu Solren) பி. ஆறுமுககுமார் இயக்கத்தில், கணேஷ் காளிமுத்து, இரமேஷ் காளிமுத்து, பி. ஆறுமுககுமார் தயாரிப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிகரிக்கா, காயத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், சிறீ சரவணனின் ஒளிப்பதிவில், ஆர். கோவிந்தராஜின் படத்தொகுப்பில் 02 பிப்ரவரி 2018இல் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.[1]

நடிப்பு[தொகு]

கதை[தொகு]

பழங்குடி இனத்தினராக விஜய் சேதுபதியும்யும், கல்லூரி மாணவராக கெளதம் கார்த்திக்கும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பழங்குடி இனத்தலைவருக்கும், கல்லூரி மாணவருக்கும் இடையே நிகழும் நிகழ்வுகளே இத்திரைப்படத்தின் கதைக்களம்.[2] பழங்குடி மக்களின் தலைவராக இப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி எட்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளதாக, இத்திரைப்படத்தில் இயக்குநர் ஆறுமுகக்குமார் கூறியுள்ளார்[3]

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒன்றும் ஆகாமல், எவரையும் அடித்திடாமல் அரசியல் செய்யாமல் நேரான வழியில் திருபவர் எமன் (விஜய் சேதுபதி).[4] திருடுவதற்காக அவரது அம்மா குறிபார்த்து எமனைத் தேர்ந்தெடுத்து ஆந்திர மாநிலத்தின் எமசிங்கபுரத்திலிருந்து சென்னைக்கு அனுப்புகின்றார். எமனுக்கு ஒத்தாசையாக புருசோத்தமன் (ரமேஷ் திலக்), நரசிம்மன் (ராஜ்குமார்) ஆகிய இருவரும் செல்கின்றார்கள். எமன் திருட சென்ற இடத்தில் கல்லூரி மாணவி சௌம்யாவை (நிஹாரிக்கா கோனிடெல்லா) பார்க்கின்றார். அதன்பின் செய்ய வந்த திருட்டை மறந்துவிட்டு சௌம்யாவையே சுற்றுகின்றார். எமன், சௌம்யாவை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயற்சி செய்கின்றார்.[5] இதே வேளையில் சௌம்யாவை அவர் படிக்கும் கல்லூரியில் படித்துவரும் ஹரிஷ் (கௌதம் கார்த்திக்) விரும்புகின்றார். சரியான நேரம் பார்த்து சௌம்யாவை எமன் எமசிங்கபுரத்துககு கடத்துகின்றார். சௌம்யாவை எமனிடமிருந்து மீட்பதற்காக ஹரிசும் அவருடைய நண்பன் சதீசும் (டேனியல் ஆனி போப்) எமசிங்கபுரத்திற்குச் செல்கின்றார்கள். எமன் சௌம்யாவை ஏன் கடத்துகின்றார்? அதன் பின்னணி என்ன? எமனின் இலக்கு நிறைவேறியதா? ஹரிஸ் சௌம்யாவை மீட்கச் ஆந்திரக்காட்டிற்குச் சென்றபோது நிகழ்ந்த நகைச்சுவை, இதர திருப்புமுனை நிகழ்வுகள்தான் இத்திரைப்படத்தின் கதை.[6]

இசை[தொகு]

இத்திரைப்படத்தில் நான்கு பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியப்பணிகளை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொண்டுள்ளார், இப்படத்திற்கான பாடல்களை முத்தமிழ், கார்த்திக் நேதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

திரைப்படப்பணிகள்[தொகு]

இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் 2017இல் இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக கௌதம் கார்த்திக் (நடிகர்) நடிக்கவுள்ளாதாகவும் இதுவொரு பரபரப்பான நகைச்சுவைப்படம் என்று தெரிவித்தார். இத்திரைப்படத்தில் பழங்குடியின மக்களின் தலைவராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளளதாகவும் படத்தின் இயக்குநர் அறிவித்தார். இத்திரைப்படத்தின் பெரும்பகுதி ஆந்திரப்பிரதேசத்தின் வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]