ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
Appearance
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் | |
---|---|
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட விள்ம்பரம் | |
இயக்கம் | லெனின் எம். சிவம் |
தயாரிப்பு | வஷ்னு முரளி |
கதை | லெனின் எம். சிவம் |
திரைக்கதை | லெனின் எம். சிவம் |
இசை | பிரவீண் மணி |
நடிப்பு | சுதன் மகாலிங்கம் |
ஒளிப்பதிவு | சுரேஸ் ரோகின் |
கலையகம் | Eye Catch Mulitmedia Inc. |
விநியோகம் | Eye Catch Mulitmedia Inc. |
வெளியீடு | செப்டம்பர் 28, 2013 (கனடா) |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (A Gun & a Ring), 2013 ஆம் ஆண்டு கனடாவில் தயாராகி, வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் ஒன்றாகும்.[1] 112 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்தும் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களில் 14 படங்கள் மட்டுமே போட்டிக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.[2][3]
இத்திரைப்படத்தை 1999 என்னும் திரைப்படத்தை இயக்கிய லெனின் எம்.சிவம் எழுதி இயக்கியுள்ளார்.
பங்கு பற்றிய திரைப்பட விழாக்கள்
- சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா (SIFF) in June 2013[4]
- மொன்ரியல் உலக திரைப்பட விழா (MWFF) in Aug 2013[5]
- லூஈவில் பன்னாட்டுத் திரைப்பட விழா (LIFF) in Oct 2013
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழா (CIFF) in Oct 2013
- ஹமில்டன் திரைப்பட விழா (HFF) in Nov 2013
- நார்வே தமிழ்த் திரைப்பட விழா (NTFF) in Apr 2014
- சென்னை பெண்களுக்கான உலக திரைப்பட விழா (CWIFF) in May 2014
- கொழும்பு உலக திரைப்பட விழா (IFFColombo) in Sept 2014
விருதுகள்
- சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு
- ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேர்வு
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது ( Sapphire Award for Best Feature Film)
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது (Sapphire Award for Best Director)
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது (Emerald Award for Best Actor Jon Berrie)
- சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது (Green Award for Best Actor Kandasamy Gangatharan)
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது
- நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது
நடிகர்கள்
- ஜான் பெரி
- மதிவாசன் சீனிவாசகம்
- கந்தசாமி கங்காதரன்
- சேகர் தம்பிராசா
- பாஸ்கர் மனோகரன்
- தேனுகா கந்தறாயா
- பவானி சோமசுந்தரம்
- செல்வஜோதி ரவீந்திரன்
- ஷெளி ஆந்தனி
- சுதன் மகாலிங்கம்
- கோபி திரு
- பார்த்தி புவன்
வெளி இணைப்புகள்
- வலைத்தளம் பரணிடப்பட்டது 2014-01-28 at the வந்தவழி இயந்திரம்
- Facebook வலைத்தளம்
- Twitter வலைத்தளம்
- Youtube வலைத்தளம்
- IMDB வலைத்தளம்
மேற்கோள்கள்
- ↑ [a gun and a ring Tamil-Candian film to screen at Shanghai film festival]
- ↑ Shanghai International Film Festival Brings More Surprises[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Shanghai International Film Festival, IMDb
- ↑ A Gun & a Ring - NTFF 2014
- ↑ Lenin M. Sivam’s “A Gun & A Ring”