ஒரு அடார் லவ் (திரைப்படம்)
ஒரு அடார் லவ் (திரைப்படம்) | |
---|---|
நடிப்பு | |
வெளியீடு | பெப்ரவரி 14, 2019 |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹5 crore |
மொத்த வருவாய் | ₹12 crore |
ஒரு அடார் லவ் (Oru Adaar Love) என்பது 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட காதல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆடும். இப்படத்தின் இயக்கம் ஓமர் லூலூ என்பவர் ஆகும். இப்படத்தில் ரொஷன் அப்துல் ரஹோஃப், நூரின் செரிப் மற்றும் பிரியா பிரகஷ் வாரியார் போன்றோர் நடித்துள்ளார்கள்.[1] இப்படத்தின் கதையானது தனியார் உயர்நிலைப்பள்ளியில் நடக்கும் சம்பவங்களின் பின்னனியாகும். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இதே தலைப்பில் தமிழிலும் கினிக் லவ் ஷ்டோரி என்ற தலைப்பில் கன்னடத்திலும், தெலுங்கில் லவ்வர்ஷ் டே என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டது.
கதை
[தொகு]தனியார் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வகுப்பில் அவர்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளே இதன் கதையாகும். தன் காதலி பிரியா தன்னைவிட்டுப் பிரிந்ததனால் அவளை தன் வசப்படுத்த நினைக்கும் ரோசன் கதா என்ற தோழியை காதலிப்பதாக நடிக்கிறான். ஆனால உண்மையிலேயே கதா ரோசனையும் ரோசன் கதாவையும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் பிரியா கதாவையே காதலித்துக்கொள் என சொல்லிவிட்டு ரோசனிடமிருந்து விடைபெருகிறாள். அப்போது கதாவிடம் தன் காதலைச்சொல்ல முற்படும் போது கும்பல் ஒன்று அவர்களைத்தாககுகிறது. அவர்களிடமிருந்து இருவரையும் நன்பர்கள் காப்பாத்துகிறார்கள்.
நடிப்பு
[தொகு]- ரோஷன் அப்டுல் ரோகிப் - ரோஷன்
- நோரின் ஷெரிப் - கதா
- பிரியா பிரகஷ் வாரியார் - பிரியா[2]
வழக்கு
[தொகு]இப்படத்தில் கதானாயகி ஒரு பாடலுக்கு கண்னடிக்கும் காட்சி இசுலாமியரின் தூதுவரை இழிவுபடுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா, மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தைச் சார்ந்த இசுலாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்தனர். ஆனால் அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.[3]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soman, Deepa (January 2018). "Omar Lulu's next film is 'Oru Adaar Love'". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/omar-lulus-next-film-is-oru-adaar-love/articleshow/60531587.cms. பார்த்த நாள்: 12 February 2018.
- ↑ Shrijith, Sajin (17 December 2018). "Trolling worked to our advantage, says 'Oru Adaar Love' producer Ousepachan Vaalakuzhy". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/malayalam/2018/dec/17/everything-has-turned-out-well-1912401.html. பார்த்த நாள்: 14 February 2019.
- ↑ வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு [தொடர்பிழந்த இணைப்பு]