ஒருமணி நேரப் பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு பருவச் செடி பூ ஆகும், இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக்கூடியது இதில் பூ தனித்தனியாக வருகிறது.

ஒருமணி நேரப் பூ[தொகு]

வகைப்பாடு[தொகு]

ஒருமணி நேரப் பூ-கைபிஸ்கஸ் ட்ரையோனம்

தாவரவியல் பெயர் : கைபிஸ்கஸ் ட்ரையோனம் Hibiscus trionum

குடும்பம் : மால்வேசியீ Malvaceae

இதரப் பெயர் : வேதனைப்படும் செடி

செடியின் அமைவு[தொகு]

இது ஒரு பருவச் செடி ஆகும். இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக்கூடியது. இதில் பூ தனித்தனியாக வருகிறது. இதனுடைய பூ மிக அழகாக இருக்கும். இதன் பூ வெளுத்த மஞ்சள் நிறத்திலோ, சில சமயம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இப்பூவின் மையப்பகுதியில் மினுமினுக்கும் இளம் ஊதா சிவப்பு நிறம் உள்ளது. இதனால் இப்பூ மிகவும் அழகாக உள்ளது. இப்பூ 7 செ.மீ. விட்டம் உடையது. இப்பூ சூரியனின் பிரகாசமான ஒளிபடும் போது நன்றாக மலர்கிறது. பூவின் மீது நிழல் பட்ட உடனே வாடிவிடுகிறது. இச்செடி தென் ஆப்பிரிக்காவில் வளர்கிறது. இதை பாறைகள் நிறைந்த பகுதியில் நடுகிறார்கள். இச்செடி செம்பருத்தி சாதியைச் சார்ந்தது. இந்த செம்பருத்தி சாதியில் 70 வகைச் செடிகள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருமணி_நேரப்_பூ&oldid=2458921" இருந்து மீள்விக்கப்பட்டது