ஒருப்படித்தான காரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருப்படித்தான காரணி ( homogenity factor ).கதிரியலில் பொதுவாக வடிகட்டுவதால் (Filtration ) மென்கதிர்கள் அகற்றப்பட்டு சற்று கடினமான கதிர்களே வெளிப்படுகின்றன. இதனால் பயனற்ற மென்கதிர்கள் உடற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. எந்த கன அளவு வடிகட்டியின் தடிமன் கதிர்களின் செறிவினை பாதியாகக் குறைக்கிறதோ அந்த கன அளவு அந்தக் கதிரின் அரைமதிப்புத் தடிமன்(HVL ) எனப்படுகிறது. இந்த நிலையில் வடிகட்டியிலிருந்து வெளிப்படும் கதிர்கள் சற்று அதிக கடினத் தன்மைப் பெற்று இருக்கிறது.இப்போது மறுபடியும் அரை மதிப்புத் தடிமன் கணிக்கப்பட்டால் ,இந்த அளவு முதலில் கணித்த அளவினை விடச் சற்று அதிகமாக இருக்கும். இது எதிர்பார்க்கக் கூடியதே.

முதல்HVL/இரண்டாவது HVL ,ஒருப்படித்தானத் தன்மையினைக் காட்டும் காரணி எனப்படும்.இந்த காரணி கூடுதலாக இருந்தால் கற்றை ஒருப்படித்தானதாக இருக்கிறது எனலாம்.குறைவாக இருந்தால் கற்றை ஒருப்படித்தானதாக இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.கதிர் மருதுவத்தில் எக்சு கதிர்களைப் பயன்படுத்தும் போது இக் காரணி கவனிக்கப்பட வேண்டும்.


Fundamental physics of radiology-w.j Meredith and J.B Masey

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருப்படித்தான_காரணி&oldid=1825245" இருந்து மீள்விக்கப்பட்டது