ஒரிரு எண்ணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 இணையத்திலும், பல பொது மேடையிலும் சின்ன,சின்னக் கட்டுரைகளையும் சேர்த்து ஒரிரு எண்ணங்கள் என்ற தலைப்பி்ல் சுஜாதாவின் புத்தாகமாக வெளியிடப்பட்டு இருக்கின்றது. பெரும்பாலும் இணையத்தமிழ் கணினி, இலக்கியம், பொது அறிவியல் சார்ந்த ஆழமாகச் சிந்திக்கும வைக்கும் கட்டுரைகள்.
   சுஜாதாவால் 51க்கும் மேற்பட்ட சின்னச் சின்னக் கட்டுரைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இணையதமிழின் எதிர்காலம் என்ற தலைப்பில் 1986ல் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். மெல்ல, மெல்ல பின் தள்ளிக்கொண்டு இண்டர்நெட் கண்டுபிடிப்பதற்கு முன்பே தமிழ் இணையத்தில் பயன்பட்டது என்று சொன்னாலும் அச்சரியம் இல்லை.
   ஆனால், இதில் முக்கியமானது இணையத்தில் மிக முன்னேற்றம் அடைந்த சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் தாய்மொழி ஆர்வமும், அதேபோல் அமெரிக்காவில் வாழும் மென்பொருளாளர்களின் தமிழ் ஆர்வமும், தமிழுக்கு உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும், காப்பாற்றி ஆகவேண்டும் என்ற தீர்மானித்து சும்மா இருந்த சங்கை ஓய்வு நேரத்தில் ஊதித் தமிழை இணையத்தில் உள்ளீட்டு உன்னதப்படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
   இதன் முன்னோடியாக சொல்லவேண்டியவர்கள் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், சிங்கப்பூர் கோவிந்தசாமி, மலேசியாவின் முத்துஎழிலன், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் இவர்களின் பணிச் சிறப்பானது. அதேநேரத்தில் தமிழ் சமுதாயத்தின் தமிழனின் தின வாழ்வையும், மனவாழ்வையும் எந்த அளவுக்கு சினிமா ஆக்கிரமிக்கிறதோ, அந்த அளவில் இணையத்திலும் சினிமா தான் பிரதானமாக இருக்கிறது. அத்தனை நடிகர்களின் வாழ்க்கையும் அவர்களைப் பற்றிய விவரமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எ.ஆர். ரகுமான் அத்தனை மெட்டுகளையும் காப்பி ரைட் கவலையின்றி கேட்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரிரு_எண்ணங்கள்&oldid=2376498" இருந்து மீள்விக்கப்பட்டது