ஒரிகோனைட்டு
ஓரிகோனைட்டு Oregonite | |
---|---|
ஓரிகோனைட்டு, அவாருயைட்டு (பரிமாணம்: 11 மி.மீ x 4 மி.மீ x 5 மி.மீ) | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Ni2FeAs2 |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக அமைப்பு | அறுகோணம் வகைப்படுத்தப்படாத இடக்குழு |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
மேற்கோள்கள் | [1][2][3] |
ஒரிகோனைட்டு (Oregonite) என்பது Ni2FeAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நிக்கல் இரும்பு ஆர்சனைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள யோசுபீன் கிரீக் சுரங்க மாவட்டத்தில் ஒரிகோனைட்டு முதன் முதலாக கண்டறியப்பட்டது.
அறுகோண படிகத் திட்டத்தில் ஓரிகோனைட்டு படிகமாகிறது. 5 என்ற. மோவின் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் கொண்டுள்ளது.
தோற்றம்
[தொகு]ஓரிகோனைட்டு அது கண்டுபிடிக்கப்பட்ட இருப்பிடத்தைத் தவிர உருசியாவின் சிர்னைசுகி மலைகளில் உருமாற்றமடைந்த அக்னிப்பாறைகளில் சிலிக்கேட்டு வகை மில்லரைட், இயசெல்வூதைட்டு போன்ற நீர் வெப்ப நிக்கல் தாதுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. சைப்பிரசு நாட்டின் சுகௌரியாடிசா சுரங்கத்தில் எரிமலை சார்ந்த பெரும் சல்பைடு தாது படிவுகளிலும் கனடா நாட்டின் ஒன்றாறியோ மாகாணத்தின் திம்மின்சு நகரத்திலுள்ள கித் சுரங்கத்திலிருக்கும் செர்பெண்டைன் வகை பாறைகளுக்குள் காணப்படும் குரோமைட்டு படிவுகளிலும் ஓரிகோனைட்டு கிடைக்கிறது.