உள்ளடக்கத்துக்குச் செல்

ஒராசியோ ஆன்டினோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒராசியோ ஆன்டினோரி

ஒராசியோ ஆன்டினோரி (Orazio Antinori - பிறப்பு 28 அக்டோபர் 1811 – இறப்பு 26 ஆகஸ்ட் 1882) என்பார் இத்தாலியினை சார்ந்த கள ஆய்வாளர் மற்றும் விலங்கியலாளர் ஆவார்.

ஆன்டினோரி பெருஜியாவில் (அப்போதைய பாபல் மாநிலம்) பிறந்து, பெருஜியா மற்றும் உரோமில் இயற்கை வரலாற்றினைக் கற்றார். பின்னர் சார்லஸ் லூசியன் போனபர்டியுடன் இணைந்து இத்தாலிய முதுகெலும்பிகளின் படிமவியலை விவரித்தார். பின்னர் 1840 ஆம் ஆண்டுகளின் இடையில் அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பத்திரிக்கையாளராக மாறினார். 1848ஆம் ஆண்டு நியாபாலிட்டன்களுக்கு எதிராகப் படைத்தலைவனாகப் போரிட்ட காரணத்தினால் நாடுகடத்தப்பட்டார். அவர் ஏதேன்சு மற்றும் சுமைரனாவில் வாழ்ந்தபோது அங்குள்ள பறவைகள் குறித்து ஆர்வமானார்.

1854ல் கிருஸ்டினா டிரைவல்சியோ பெல்கிஒஜோசாவுட சிரியா சென்றார். அதன் பிறகு துருக்கியுள்ள அனத்தோலியா பகுதிக்குச் சென்றார். 1859ஆம் ஆண்டு எகிப்திலிருந்து புறப்பட்டு, கார்லோ பையாஜியாவுடன் (1830-1882) 1860-1861ல் நைல் சென்றார். ஆன்டினோரி தன்னிடமிருந்த பறவைகள் தொடர்பான சேகரிப்புகளை டுயூரினில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு விற்றார். நீண்ட நாட்கள் டியூனிசியாவில் தங்கியிருந்த அன்டினோரி சூயசு கால்வாய் தொடக்கவிழாவின் போது இத்தாலி நாட்டினைப் பிரதிநிதித்துவம் படுத்தும் விதமாகக் கலந்துகொண்டார்.

எத்தியோப்பாவிற்கு சென்ற ஒன்டோர்டோ பெக்காரி பயணக்குழுவில் ஆன்டினோரி பங்கேற்று இயற்கை வரலாற்று மாதிரிகளின் முக்கியமான தொகுப்புகளைச் சேகரித்தார். இத்தாலிக்குத் திரும்பிய பின் இத்தாலியப் புவியியல் சங்கத்தின் செயலாளரானார். 1874 ஆம் ஆண்டில், ஆன்டினோரி துனிசுக்கு அருகில் உள்ள உப்பு ஏரி குறித்து ஆராய்ந்தார். 1876 ​​ஆம் ஆண்டில் அவர் குஸ்டாவோ சியாரினி மற்றும் அன்டோனியோ செச்சி ஆகியோருடன் எத்தியோப்பியாவின் ஷெவா மாகாணத்திற்குச் சென்ற பயணத்தில் பங்கேற்றார். அங்கு அவர்கள் லிச்சில் நெகஸ் மெனலிக்கைச் சந்தித்தனர். லெட் மரேஃபியாவில் புவியியல் நிலையத்தைக் கண்டுபிடிப்பதற்கான அனுமதியினை பெற்றனர். பின்னர் 1882ல் ஆன்டினோரி ஷெவாவில் இயற்கை எய்தினார்.

தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இவரை ஆசிரியராகக் குறிக்க சுருக்கமாக ஆன்டினோரி பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

1. IPNI. Antinori.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராசியோ_ஆன்டினோரி&oldid=3905149" இலிருந்து மீள்விக்கப்பட்டது