ஒய். பாலரத்தினராஜா
வை. பாலரத்தினராஜா Y. Balaretnarajah | |
|---|---|
| பிறப்பு | சூலை 22, 1939 |
| இறப்பு | மே 29, 2022 (அகவை 82) |
| சார்பு | இலங்கை |
| சேவை/ | |
| தரம் | மேஜர் செனரல் |
| படைப்பிரிவு | இலங்கைக் கவசப் படை |
| கட்டளை | தலைமை அதிகாரி, இலங்கை இராணுவம் Commandant of the Volunteer Force 1 Division |
| போர்கள்/யுத்தங்கள் | 1971 கிளர்ச்சி இலங்கை உள்நாட்டுப் போர் 1987-89 புரட்சி |
| விருதுகள் | |
ஒய். பாலரத்தினராஜா, Major General Y. Balaretnarajah, 22 யூலை 1939 – 29 மே 2022) என்பவர் இலங்கை இராணுவ அதிகாரி ஆவார். இவர் இலங்கை இராணுவத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தொண்டர் படையணியின் கட்டளையதிபராகவும், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார். இவர் 1-வது டிவிஷன், கவசப் படைப்பிரிவு, 21 வது படைப்பிரிவு மற்றும் 24 வது படைப்பிரிவு ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.
கல்வி
[தொகு]1939-ஆம் ஆண்டு யூலை 22 ஆம் திகதி பிறந்த இவர் , யாழ்ப்பாணத்தில் உள்ள பரி. யோவான் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1959 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இலங்கைத் தரைப்படையில் சேர்ந்த இவர், சண்ட்ஹர்ஸ்டில் தனது அடிப்படை அதிகாரிக்கானப் பயிற்சியைப் பெற்றார். பிரித்தானியப் இராணுவத்தின் 'ராயல் ஆர்மர்ட் கார்ப்ஸ்' பயிற்சி மையத்தில் கவசப்படை இளநிலை அதிகாரிகளுக்கான பயிற்சியையும், இந்திய இராணுவத்தின் கவசப்படை முதுநிலை அதிகாரிகளுக்கான பயிற்சியையும் நிறைவு செய்தார். பின்னர், இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
இராணுவ வாழ்க்கை
[தொகு]அடிப்படை அதிகாரிப் பயிற்சியை நிறைவுசெய்த பின்னர், பாலரத்தினராஜா 1961 திசம்பர் 21 அன்று இலங்கை கவசப் படையில் இரண்டாம் இளப்பேரரையராக நியமிக்கப்பட்டார். இவர் 1971 கிளர்ச்சியின் போது 1 வது உளவுப் படைப்பிரிவின் படைத் தலைவராகவும், தியதலாவாவில் உள்ள இராணுவப் பயிற்சி மையத்தில் அதிகாரிப் பயிற்றுவிப்பாளராகவும், இராணுவத் தலைமையகம் மற்றும் வடக்கு கட்டளைத் தலைமையகத்தில் பணியாளர் அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் கேப்டன் பதவிக்கு உயர்ந்து 1வது உளவுப் படைப்பிரிவிற்கு படைப்பிரிவுத் தளபதியாக நியமிக்கப்பட்டார். மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்ட இவர், தியதலாவாவில் பிரதித் தளபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்ந்து தளவாடக் கட்டளையில் பணியாளர் அதிகாரியானார்.
ஒரு கர்னலாக, இவர் தளவாடப் படைப்பிரிவின் தளவாட இயக்குநராகப் பணியாற்றி, 1986 இல் பிரிகேடியர் பதவிக்கு உயர்ந்தார். இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் தொடக்கத்தையொட்டி, புத்தளத்தைத் தளமாகக் கொண்ட 24 வது படையணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார். பின்னர், யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட 21 வது படையணியின் பிரிகேட் தளபதியாக நியமிக்கப்பட்டு, அதன்பின் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் (SFHQ-J) தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலகட்டத்தில் இவர் கவசப் படையணியையும் உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார்.
1989 ஆம் ஆண்டில், இவர் சிறு நாயகம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்று, 1 வது பிரிவின் தளபதியாக ( GOC ) நியமிக்கப்பட்டார். பின்னர், இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஆவதற்கு முன்பு, இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அத்துடன், இலங்கை கவசப் படையணியின் படைப்பிரிவுத் தளபதியாகவும் பணியாற்றினார்.
பாலரத்தினராஜா 1992 அக்டோபரில் சிறு நாயகம் பதவியுடன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். இவர் ஆயுதப்படை வீரர் சங்கத்தின் தலைவராகவும், யாழ்ப்பாணம் புனித ஜான்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (தெற்கு இலங்கை) துணைப் புரவலராகவும் திகழ்ந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பாலரேத்தினஜா சரோஜினியை (சோமசுந்தரம்) மணந்தார். இந்த இணையருக்கு அனுஷா, அர்ஜுனா, பிரம்மன் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். [1] இவர் 2022 மே 27 அன்று தனது 82 வயதில் இறந்தார் [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BALARETNARAJAH SAROJINI". Srilankanobituaries.com. Sri Lankan Obituaries. Archived from the original on 29 August 2017. Retrieved 29 August 2017.
- ↑ "Military Honours Salute Late Major General Y Balarathna Raja (Retd) During Final Journey". Sri Lankan Army. Retrieved 23 March 2024.