ஒப்பு திசை வேகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயங்கிக் கொண்டிருக்கும் இரு பொருட்களுக்கிடையே உள்ள ஒப்பு திசைவேகம் (Relative velocity) என்பது, எந்த அளவில் அவ்விரு பொருட்களுக்கிடையே உள்ள தூரம் அலகு நேரத்தில் கூடுகிறது அல்லது குறைகிறது என்பதனைக் குறிக்கும். தொடர் வண்டி போன்ற ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பயணிக்கும் போது இதனை உணரலாம்.
A என்கிற பொருள், மணிக்கு 15 கி. மீ. திசைவேகத்துடனும் B என்னும் பொருள் 25 கி.மீ. திசைவேகத்துடனும் ஒரேதிசையில் செல்வதாகக் கொண்டால் A ன் ஒப்பு திசைவேகம் 15-25= - 10 கி.மீ./மணி ஆகும். மாறாக இவை எதிரெதிர் திசையில் செல்வதாகக் கொண்டால் 15 - (-25), A ன் ஒப்பு திசைவேகம் 40 கி.மீ./மணி ஆகும்.