ஒப்புமை கவனிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒப்புமை கவனிப்பு (Analog observation) என்பது இயற்கையாகக் கவனிப்பது என்பதற்கு மாறாக ஒரு செயற்கையான அமைப்பில் ஒரு பொருளை ஆய்வு செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும்[1]. மருத்துவ அலுவலகங்கள் அல்லது ஆராய்வு ஆய்வகங்கள் ஆகியவை பொதுவாக ஒப்புமை கவனிப்பு அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், வரையறையின் படி எந்தவொரு செயற்கை சூழலிலும் ஒப்புமைக் கண்காணிப்பை மேற்கொள்ளலாம். சுற்றுச்சூழலில் இயற்கையாகவே அப்பொருள் தோன்றுகின்ற சூழ்நிலையாக இருந்தாலும்கூட இக்கண்காணிப்பை மேற்கொள்ளலாம்.

பயன்பாடுகள்[தொகு]

ஒப்புமை கவனிப்பு குறிப்பாக இரண்டு வகையான மீள்செய்கை பயன்பாடுகளுக்காகப் பிரிக்கப்படுகிறது. அமைப்பு மற்றும் பொருளின் நடத்தை தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட, பொருள் அமைந்துள்ள சூழலின் மாறிகளை மாற்றுவதால் உண்டாகும் விளைவுகளை ஆராய்வது முதல்வகையாகும். சோதனை சார்பு சமூகச் சூழல்களில் அப்பொருளின் நடத்தைகளை ஒப்பு நோக்குவது இரண்டாவது வகையாகும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Comer, Ronald J. (1996). Fundamentals of Abnormal Psychology. New York: W.H. Freeman and Co.. பக். 80. 
  2. Corsini, Raymond J. (1984). Encyclopedia of psychology. New York: Wiley. பக். 89. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்புமை_கவனிப்பு&oldid=2748334" இருந்து மீள்விக்கப்பட்டது