ஒப்பனக்காரத் தெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பனக்காரத் தெரு என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாநகரில் உள்ள ஒரு பழமையான தெரு மற்றும் வணிக முக்கியத்துவம் கொண்ட தெருவும் ஆகும். கோயம்புத்தூரில் முதன்முதலாக மின் இணைப்பு வசதி பெற்ற தெரு என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்தத் தெரு கோயம்புத்தூர் நகராட்சிக் கட்டிடத்துக்கும் டவுன் ஹாலுக்கும் அருகில் உள்ளது. இந்தத் தெருவின் ஒருபுறம் தெற்கு ஒக்கடமும் மறுபுறம் மில் சாலையும் உள்ளன.

இந்தத் தெருவுக்கு ஒப்பனக்காரத் தெரு என பெயர் வந்ததற்குக் காரணம், இந்தத் தெருவில் அக்காலத்தில் மக்களிடம் வரி வசூலித்த பலிஜா நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர் என்பதால், இது ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஒப்பனக்காரர்கள் என்றால் தமிழில் வரி வசூலிப்பவர்கள் என்று பொருள் ஆகும். தெலுங்கில் அது ஒப்பனவாரு என்று அழைக்கப்படுகிறது.

ஒப்பனக்காரத் தெருவில். துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற பல வணிக நிறுவனங்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கட்டிடங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று பாரம்பரிய சிறப்புமிக்க அத்தர் ஜமாத் பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளிவாசல் 1860 இல் கட்டப்பட்டது. இது திருநெல்வேலி பேட்டையிலிருந்து அங்கே குடியேறிய 52 வாசனைத் திரவ வணிகக் குடும்பங்களால் கட்டப்பட்டது. அதனால்தான் இந்த பள்ளிவாசல் அத்தர் மசூதி என்றழைக்கப்படுகிறது. அத்தர் என்றால் தமிழில் வாசனைத் திரவியம் என்று பொருள். இந்தப் பள்ளிவாசலுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வந்துள்ளார். மேலும் உருசியாவின் பிரதமராக குருஷ்ஷெவ் ஆவரதற்கு முன்பு 1953 இல் இந்த பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முகமது ஹுசைன் (5 மே 2018). "ஓ! பணக்காரத் தெரு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 மே 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பனக்காரத்_தெரு&oldid=3576807" இலிருந்து மீள்விக்கப்பட்டது