ஒபாயதுல்லா பைக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒபாயதுல்லா பைக் (Obaidullah Baig 1 அக்டோபர் 1936 – 22 ஜூன் 2012) ( உருது: عبيدالله بيگ ) ஒரு பாக்கித்தானின் கராச்சியினைச் சேர்ந்த சிறந்த அறிஞர், உருது எழுத்தாளர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடக நிபுணர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1936 இல் இந்தியாவின் ராம்பூரில் பிறந்த பேக், 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து 1950 களின் முற்பகுதியில் தனது குடும்பத்தினருடன் கராச்சிக்கு குடிபெயர்ந்தார். பைக் தனது இடைநிலைக் கல்லூரியைத் தாண்டி முறையாக கல்வி கற்கவில்லை. [2] அவரது மனைவி சல்மா பேக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்துவது மற்றும் கல்வித்துறையில் சேவை செய்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

ஒபாயதுல்லா பைக்கிற்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகள் மரியம் ஒபாயதுல்லா பைக், காட்சி ஊடக கலைஞர் மற்றும் அமெரிக்காவில் நாடக நடிகராகப் பணிபுரிந்தார். இவர் தனது தந்தையின் தொழிலான திரைப்படங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டார். இவரது இரண்டாவது மகள் பாத்திமா ஆதர்ஷ், நடிகர் ஆதர்ஷ் அயாஸை மணந்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். மூன்றாவது மற்றும் இளைய மகள் அமினா பேக் தி நியூஸ் இன்டர்நேஷனலில் எனும் செய்தித்தாள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

தொழில்[தொகு]

பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியின் முன்னோடி மற்றும் ஆளுமையான அஸ்லம் அஸ்ஹார் பெய்கிற்கு உதவியதுடன், அவரை பாக்கித்தானிய மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார். [2] 1967 ஆம் ஆண்டில் வெளியான கசவ்தி எனும் வினாடி வினாப் போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். 1970 ஆம் ஆண்டில் இப்திகார் அரிஃப் என்பவருடனும் 1990 ஆம் ஆண்டில் கசி சலாகுதீன் என்பவருடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 20 கேள்விகள் கேட்கப்படும் . அவை இலக்கியம் மற்றும் தற்போதைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

தனது 48 ஆண்டுகால வாழ்க்கையில், 300 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை பேக் தயாரித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் தாவரங்கள், விலங்குகள் மற்றும் வரலாறு ஆகியவை அதன் மையக் கருத்தாக இருந்தது. 1970 களில் பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியில் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பபப்பட்ட தொலைக்காட்சித் தொடரான சைலானி கே சாத் போலவே வனவிலங்குகள், ஏரிகள், சிந்துவில் வனவிலங்கு, கேம் வார்டன் மற்றும் லைஃப் இன் ஸ்டோன் ஆகிய படங்களும் பெரும் பாராட்டைப் பெற்றன.

இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தில் தேசிய மற்றும் பிராந்திய மொழிகள் இயக்குநராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார், அங்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட பாகிஸ்தானின் முதல் உருது மொழி இதழான ஜரீதாவை நிறுவினார்.

தொலைக்காட்சி மற்றும் தயாரிப்பு வாழ்க்கைக்கு முன்னர், பேக் உதவி பதிப்பசிரியராக ஆஷூஜா இதழில் பணியாற்றினார். மொழிபெயர்ப்பாளர் / அறிவிப்பாளராகவும், வெளி சேவைகள்,டெய்லி ஹுரியாட் செய்தித்தாளில் உதவி ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

பாக்கிஸ்தானிய ஊடகங்களுக்கு அவர் செய்த சேவைகளுக்காக ஒபாதுயுல்லா பேக் 2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் குடியரசுத் தலைவரால் பிரைட் ஆப் பெர்ஃபாமன்ஸ் விருதைப் பெற்றார். [3] பாகிஸ்தான் தொலைக்காட்சி கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.

மரணம் மற்றும் மரபு[தொகு]

ஒபாயதுல்லா பெக் 22 ஜூன் 2012 அன்று கராச்சியில் 75 ஆம் வயதில் இறந்தார். [1] [4] [2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Moazzam (23 June 2012). "The symbolic death of Pakistan’s mastermind". https://www.dawn.com/news/728913/the-symbolic-death-of-pakistans-mastermind. பார்த்த நாள்: 18 May 2019. 
  2. 2.0 2.1 2.2 Rafay Mahmood (22 June 2012). "Obaidullah Baig: Pakistan loses its 'Kasauti' champion". The Express Tribune (newspaper). பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
  3. Obaidullah's death a national loss Dawn (newspaper), Published 29 June 2012, Retrieved 18 May 2019
  4. "Rest in peace: Obaidullah Baig laid to rest". The Express Tribune (newspaper). 23 June 2012. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபாயதுல்லா_பைக்&oldid=2870478" இலிருந்து மீள்விக்கப்பட்டது