ஒன் 2 கா 4
| ஒன் 2 கா 4 | |
|---|---|
| இயக்கம் | சசில்கால் கே. நாயர் |
| தயாரிப்பு | நசீர் அகமது |
| திரைக்கதை |
|
| வசனம் | சஞ்சய் செல் |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | எஸ். குமார் ஜானி லால் |
| படத்தொகுப்பு | உசைன் பர்மாவாலா |
| கலையகம் | கிளாமர் பிலிம்சு |
| விநியோகம் | ட்ரீம்சு அன்லிமிட்டட் |
| வெளியீடு | 30 மார்ச் 2001 |
| ஓட்டம் | 173 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| ஆக்கச்செலவு | ₹12 கோடி |
| மொத்த வருவாய் | ₹13.82 கோடி |
ஒன் 2 கா 4 (One 2 Ka 4) என்பது 2001ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இதை சசில்கால் கே. நாயர் இயக்கினார். இதில் சாருக் கான், ஜூஹி சாவ்லா, ஜாக்கி செராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமமைத்துள்ளார்.[1] பின்னர் இத்திரைப்படத்தின் உரிமைகள் சாருக்கானின் ரெட் சில்லிசு நிறுவனத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டன.[2]
கதைச்சுருக்கம்
[தொகு]சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளான ஜாவேத் அப்பாஸ், அருண் வர்மா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகவும் ஒன்றாக வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். அவர்கள் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் தலைவரான கே.கே.வி.யை கைது செய்ய முயற்சிக்கின்றனர். காவல்துறையில் உள்ள ஊழல் அதிகாரிகளின் பாதுகாப்பில் இருக்கும் கே.கே.வி.யை பிடிப்பது கடினமாகிறது.
நான்கு குழந்தைகளை வளர்த்து வரும் விதவனான ஜாவேத், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் குழந்தைகளை கவனிக்குமாறு அருணிடம் வேண்டுகிறார். ஒரு போதைப்பொருள் சோதனையின் போது ஜாவேத் மர்ம நபரால் கொல்லப்படுகிறார்.
நண்பனின் இறுதி விருப்பத்திற்காக ஜாவேத்தின் குழந்தைகளைப் பொறுப்பேற்கிறார். இதற்கிடையில், கே.கே.வி.யின் இரவுக் கேளிக்கை விடுதியில் இரகசியமாகப் பணியாற்றும் கீதா அவருக்கு உதவுகிறார். பின்னர் அருண் காவல்துறையினருக்குள் இருக்கும் சதியை கண்டறிய முயற்சிக்கிறார். இறுதியில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவரே கே.கே.வி.யுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.
விமான நிலையத்தில் நடைபெறும் மோதலின் போது கே.கே.வி. தலைவரைக் கொல்கிறார். பின்னர் காவல் ஆய்வாளர் சாவந்த் தான் ஜாவேத்தை கொன்றதாக ஒப்புக்கொள்கிறார். இறுதியில் சாவந்த் தோற்கடிக்கப்படுகிறார்; அருண் மீண்டும் காவல்துறையில் சேர்க்கப்பட்டு கீதாவை மணக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- சாருக் கான் – உதவி காவல் ஆணையர் அருண் வர்மா
- ஜூஹி சாவ்லா – உதவிக் காவல் ஆணையர் கீதா சௌதுரி
- ஜாக்கி செராப் – மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜாவேத் அப்பாஸ்
- நிர்மல் பாண்டே – கிருஷ்ணன் காந்த் விர்மானி
- திலீப் ஜோசி – சம்பக்
- ராஜ் சுட்சி – சாவந்த்
- ஆகாசு குரானா – காவல் ஆணையர்
- கீத் இசுடீவன்சன் – சிபிஐ தலைவர்
- சாகிலா சதா – பிபாசா
- சுரேஷ் சத்வால் – ஆய்வாளர் ராஜேந்திரா
- மதுர் மிட்டல் – மைக்கேல் அப்பாஸ்
- பாத்திமா சனா ஷேக் – அப்பாஸின் இளைய மகள்
- எம். ரெஹ்மான் நௌஷாத் அலி – தரகர்
- ஜாக் கவுட் – ஷெட்டி
- பரத் தபோல்கர் – ஜே. டி.
இசை
[தொகு]திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். பாடல்களுக்கு மச்ரூக் சுல்தான்புரி மற்றும் மெஹ்பூப் ஆகியோர் பாடல்வரிகள் எழுதியுள்ளனர்.
| பாடல் | பாடகர்கள் |
|---|---|
| அல்லே அல்லே | சுக்விந்தர் சிங், ஷான் |
| ஹாயே தில் கி பாசி லகா | ஆல்கா யாக்னிக், சோனு நிகம் |
| ஐ ஆம் சாரி | உதித் நாராயண், ஸ்ரீநிவாஸ் (பாடகர்), பூனம் பட்டியா |
| காமோஷியான் குங்குனானே லகி | லதா மங்கேஷ்கர், சோனு நிகம் |
| ஒன் டூ கா ஃபோர் | கிளிண்டன் செரஜோ |
| ஒசாகா முரையா | ராகேசுவசு இலூம்போ, சோனு நிகம் |
| சோனா நஹின் நா சஹி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Movies: On the sets of One Two Ka Four". Rediff.com.
- ↑ "Red Chillies Entertainments". www.redchillies.com. Archived from the original on 6 October 2016. Retrieved 2016-09-30.