ஒன்றிய அமைச்சரவைக் குழு
![]() இந்திய அரசின் சின்னம் | |
![]() நரேந்திர மோதியின் மூன்றாவது அமைச்சரவைக் குழு, ஆண்டு 2024 | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 15 ஆகத்து 1947 |
வகை | இந்திய அரசின் உச்ச நிர்வாக அமைப்பு |
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | புது தில்லி |
அமைப்பு தலைமை | |
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | cabsec.gov.in |
இந்தியக் குடியரசு |
---|
![]() |
இந்திய அரசு வலைவாசல் |
மத்திய அமைச்சரவைக் குழு, என்பது இந்தியப் பிரதமர் தலைமையிலான அமைச்சர்களைக் கொண்ட இந்திய அரசின் முதன்மை நிர்வாக அமைப்பாகும். அமைச்சரவைக் குழுவில் ஆய (காபினெட்) அமைச்சர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பர். இக்குழுவில் இணை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அங்கம் வகிப்பதில்லை. இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அமைச்சரவைக் குழுவின் செயலாளராக இந்திய அமைச்சரவைச் செயலாளர் இருப்பர். அமைச்சரவைக் குழு இந்தியக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளை நிறைவேற்ற உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் உதவுகிறது.[1] இந்திய அரசின் அமைச்சகங்களுக்கு அமைச்சரவைக் குழுவின் அமைச்சர்கள் தலைவர்களாக இருப்பர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் தற்போது 71 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைக் குழு செயல்படுகிறது[2]. அமைச்சரவைக் குழு மக்களவைக்கு பதிலளிக்கும் கடமை கொண்டுள்ளது.[3]
மத்திய அமைச்சரவைக் குழு இந்திய அரசின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாகும். இது இந்திய அரசில் முக்கியமான அமைச்சகங்கள் மற்றும் துறைகளைக் கையாளும்.
ஒழுங்குமுறை
[தொகு]அரசிலமைப்பு பிரிவு 75 (3) இன் படி, அமைச்சரவைக் குழு, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கூட்டாக பொறுப்பு ஏற்கவேண்டும்.[4] மக்களவையின் நம்பிக்கையை இழந்த பிரதம அமைச்சர், புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு வசதியாக பதவி விலக வேண்டும்.
பிரிவு 78 (c) இன் படி அமைச்சரவைக் குழுவால் பரிசீலிக்கப்படாமல், எந்த ஒரு அமைச்சரும், எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பின் படி, அமைச்சரவைக் குழுவில் உள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேலும் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத எந்தவொரு அமைச்சர் தானாகவே தனது அமைச்சர் பதவியை இழப்பார்.
தரவரிசை
[தொகு]கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி, தரவரிசையின் இறங்கு வரிசையில் ஐந்து பிரிவுகளில் அமைச்சர்கள் இருப்பர்:
- இந்தியப் பிரதமர் - அமைச்சரவைக் குழுவின் தலைவர்.
- துணைப் பிரதமர் (பதவி இருந்தால்): பிரதமராக இல்லாதபோது அல்லது துணைப் பிரதமர் அமைச்சரவைக் குழுவிற்கு தலைமை தாங்குவார்[5].
- ஆய அமைச்சர் (கேபினட் அமைச்சர்): மத்திய அமைச்சரவை உறுப்பினர்; ஒரு அமைச்சகத்தை வழிநடத்துபவர்.
- இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு): ஒரு அமைச்சரவைக் குழுவில் உள்ள அமைச்சரிடம் அறிக்கை அளிக்காத இளைய அமைச்சர்.
- இணை அமைச்சர் (MoS): ஒரு மூத்த அமைச்சருக்கு அறிக்கை அளிக்கும் இணை அமைச்சர், வழக்கமாக குறிப்பிட்ட அமைச்சகத்தில் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை ஏற்பவர்.
அமைச்சரவைக் குழுக் கூட்டங்களில் இராஜங்க அமைச்சர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
நியமனம்
[தொகு]அரசமைப்பு பிரிவு 75 இன் படி, பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஒரு அமைச்சர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் மற்றும் குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ள வரை செயல்படுகிறார்[6].
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article 74 of the Constitution of India
- ↑ LIST OF COUNCIL OF MINISTERS WITH PORTFOLIOS - (Sworn in on 09.06.2024)
- ↑ Article 75(3) of Constitution of India
- ↑ Wikisource:Constitution of India/Part V#Article 74 .7BCouncil of Ministers to aid and advise President.7D
- ↑ Rajendran, S. (13 July 2012). "Of Deputy Chief Ministers and the Constitution". தி இந்து (Bangalore). இணையக் கணினி நூலக மையம்:13119119 இம் மூலத்தில் இருந்து 1 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180201092604/http://www.thehindu.com/news/national/of-deputy-chief-ministers-and-the-constitution/article3632410.ece.
- ↑ Ladwig III, Walter C. (23 December 2019). "Executive Particularism and Ministerial Selection in India". Legislative Studies Quarterly (Department of Political Science at Washington University in St. Louis) 44 (4): 469–493. doi:10.1111/lsq.12261. http://osf.io/j46fv/. பார்த்த நாள்: 21 January 2020.