ஒன்பதாவது அலை (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்பதாவது அலை (The Ninth Wave)
ஓவியர்இவான் ஐவாசோவ்ஸ்கி
ஆண்டு1850
வகைகன்வசுத் துணியில் எண்ணெய் வண்ணம்
இடம்உருசிய தேசிய அருங்காட்சியகம், சென் பீட்டர்ஸ்பேர்க்

ஒன்பதாவது அலை (The Ninth Wave) (உருசியம்: Девятый вал) எனும் ஓவியம் பெரும்பாலோனாரால் அறியப்பட்ட உருசிய கடல்-ஓவியரான (marine painter) இவான் ஐவாசோவ்ஸ்கியால் 1850இல் வரையப்பட்டதாகும்.

ஓவியம்[தொகு]

இவ்வோவியம் ஓர் இரவு நேரப் புயலுக்குப் பின் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உடைந்த கப்பலிலிருந்து கடலில் குதிக்கும் காட்சியை விவரிக்கிறது.

இங்கு கடலுக்கு மிதமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது அது அச்சுறுத்தத் தக்கதாக இல்லை என்பதையும் உயிருக்குப் போராடுவோருக்கு வாழ ஒரு வாய்ப்பளிக்கும் விதமாகவும் இருப்பதை உணர்த்துகிறது.

இவ்வோவியம் "உருசியாவின் மிக அழகான ஓவியம்" என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுவதுண்டு.[1]

பெயர்க் காரணம்[தொகு]

தமிழ் உருசியம் ஆகிய இரு தலைப்புகளுமே கடல்சார் மரபுப் பெயராகும். அதாவது, அலைகள் தொடர்ச்சியாக சிறிது சிறிதாகப் பெரிதாகி இறுதியாக மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்கும். ஒன்பதாவது (அல்லது பத்தாவது) அலையில் அந்தத் தொடர் மீண்டும் தொடங்கும். இதைக் காரணமாகக் கொண்டே இவ்வோவியம் இப்பெயருடன் அழைக்கப்படுகிறது.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. Ivan Aivazovsky: "The Ninth Wave" at theartwolf.com
  2. Ninth Wave Theory at freaquewaves.blogspot.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பதாவது_அலை_(ஓவியம்)&oldid=1364539" இலிருந்து மீள்விக்கப்பட்டது