உள்ளடக்கத்துக்குச் செல்

ஒந்துராசு

ஆள்கூறுகள்: 15°00′N 86°30′W / 15.000°N 86.500°W / 15.000; -86.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒந்துராசுக் குடியரசு
Republic of Honduras
República de Honduras
கொடி of ஒந்துராசு
கொடி
சின்னம் of ஒந்துராசு
சின்னம்
குறிக்கோள்: Libre, Soberana e Independiente
"விடுதலை, இறையாண்மை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: 
ஒந்துராசின் அமைவிடம்
ஒந்துராசின் அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
14°6′N 87°13′W / 14.100°N 87.217°W / 14.100; -87.217
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
இனக் குழுகள்
(2013)[1]
  • 82.93% மெசுத்தீசோ[a]
  • 7.87% வெள்ளை
  • 7.25% பழங்குடி
  • 1.39% கறுப்பினம்
  • 0.55% ஏனையோர்
மக்கள்ஒந்தூரான்
அரசாங்கம்ஒற்றையாட்சி சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
நாசுரி அசுபுரா
விடுதலை
15 செப்டம்பர் 1821
• முதலாம் மெக்சிக்கப் பேரரசிடம் இருந்து
1 சூலை 1823
• மத்திய அமெரிக்க கூட்டாட்சி குடியரசிடம் இருந்து "ஒந்துராசாக" அறிவிப்பு
5 நவம்பர் 1838
பரப்பு
• மொத்தம்
112,492 km2 (43,433 sq mi) (101-ஆவது)
மக்கள் தொகை
• 2023 மதிப்பீடு
Neutral increase 9,571,352[2] (95-ஆவது)
• அடர்த்தி
85/km2 (220.1/sq mi) (128-ஆம்)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $86.290 பில்.[3]
• தலைவிகிதம்
Increase $7,960[3]
மொ.உ.உ. (பெயரளவு)2025 மதிப்பீடு
• மொத்தம்
Increase $39.450 பில்.[3]
• தலைவிகிதம்
Increase $3,640[3]
ஜினி (2018)negative increase 52.1[4]
உயர்
மமேசு (2023)Increase 0.645[5]
மத்திமம் · 139-ஆவது
நாணயம்லெம்பிரா (HNL)
நேர வலயம்ஒ.அ.நே−6 (நடு நேர வலயம்)
திகதி அமைப்புநா/மா/ஆ[6]
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+504
இணையக் குறி.hn
  1. "சுதந்திரமான, இறையாண்மை கொண்ட மற்றும் சுயாதீனமான" என்பது காங்கிரசின் உத்தரவின்படி அதிகாரப்பூர்வ குறிக்கோள் ஆகும், மேலும் அது சின்னத்தில் இடம்பெற்றது.
  2. மக்கள்தொகை மதிப்பீடுகள் எயிட்சு காரணமாக ஏற்படும் அதிகப்படியான இறப்புகளின் விளைவுகளை வெளிப்படையாகக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன; இது சூலை 2007 நிலவரப்படி எதிர்பார்க்கப்படுவதை விட குறைந்த ஆயுட்காலம், அதிக குழந்தை இறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், குறைந்த மக்கள்தொகை மற்றும் வளர்ச்சி விகிதங்கள் மற்றும் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் மக்கள்தொகை விநியோகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஒந்துராசு (Honduras, /hɒnˈdjʊərəs, -æs/ (கேட்க);[7] எசுப்பானியம்: [onˈduɾas] அதிகாரபூர்வமாக ஒந்துராசுக் குடியரசு (Republic of Honduras) என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மேற்கில் குவாத்தமாலா, தென்மேற்கில் எல் சால்வடோர், தென்கிழக்கில் நிக்கராகுவா, தெற்கில் பொன்சேகா வளைகுடாவில் அமைதிப் பெருங்கடல், வடக்கில் கரிபியக் கடலின் ஒரு பெரும் நுழைவாயிலான ஒந்துராசு வளைகுடா ஆகியன உள்ளன.இதன் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் டெகுசிகல்பா ஆகும்.

16-ஆம் நூற்றாண்டில் எசுப்பானியக் குடியேற்றத்திற்கு முன்பு, ஒந்துராசு பல முக்கியமான இடையமெரிக்கப் பண்பாடுகளுக்கு, குறிப்பாக மாயா நாகரிகத்திற்குத் தாயகமாக இருந்தது. எசுப்பானிய மக்கள் கத்தோலிக்க சமயத்தையும், தற்போது ஆதிக்கம் செலுத்தும் எசுப்பானிய மொழியையும், பூர்வீக கலாச்சாரத்துடன் கலந்த ஏராளமான பழக்கவழக்கங்களையும் அறிமுகப்படுத்தினர். ஒந்துராசு 1821-இல் விடுதலை பெற்றது, அதன் பின்னர் ஒரு குடியரசாக இருந்து வருகிறது, இருப்பினும் அது தொடர்ந்து அதிக சமூக மோதல்களையும் அரசியல் உறுதியற்ற தன்மையையும் தாங்கி வருகிறது. இது மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. 1960-ஆம் ஆண்டில், கொசு கரையோரப் பகுதியாக இருந்த வடக்குப் பகுதி அனைத்துலக நீதிமன்றத்தால் நிக்கராகுவாவிலிருந்து ஒந்துராசுக்கு மாற்றப்பட்டது.[8]

நாட்டின் பொருளாதாரம் முதன்மையாக வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது, இது 1998-இல் மிட்ச் சூறாவளி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.[9] ஒந்துராசு 0.624 மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைக் கொண்டுள்ளது, இது உலகில் 138-வது இடத்தில் உள்ளது.[10] 2022-ஆம் ஆண்டில், ஒந்துராசின் தேசிய புள்ளிவிவர நிறுவனத்தின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 73% பேர் வறுமையிலும் 53% பேர் தீவிர வறுமையிலும் வாழ்ந்தனர்.[11] கீழ் வகுப்பினர் முதன்மையாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள், அதே நேரத்தில் செல்வம் நாட்டின் நகர்ப்புற மையங்களில் குவிந்துள்ளது.[12] இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக மிகவும் சமமற்ற நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[13]

ஒந்துராசின் வரைபடம்

ஒந்துராசின் சமூகம் பெரும்பாலும் மெசுத்திசோ இனத்தவர்களைக் கொண்டது; இருப்பினும், ஒந்துராசில் குறிப்பிடத்தக்க பழங்குடி, கருப்பு மற்றும் வெள்ளை சமூகங்களும் உள்ளன.[14] 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒந்துராசு நாடு-கடந்த விவசாய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது, அவற்றின் நலன்கள் ஐக்கிய அமெரிக்காவால் இராணுவ ரீதியாகப் பாதுகாக்கப்பட்டன. "வாழைக் குடியரசு" என்ற சொல் முதலில் ஒந்துராசின் அரசியல் ரீதியாக நிலையற்ற, பெருநிறுவன ஆதிக்க சனநாயகத்தை விவரிக்க உருவாக்கப்பட்டது. 1963-ஆம் ஆண்டு இராணுவச் சதியில் நாட்டின் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. 1979-இல் நாடு மீண்டும் மக்களாட்சிக்குத் திரும்பியது. 1980-களில் அமெரிக்கா ஒந்துராசில் தனது இராணுவ இருப்பை மீண்டும் நிறுவியது, கான்ட்ரா போரில் (நிக்கராகுவா புரட்சி) நிக்கராகுவா அரசாங்கத்தை எதிர்க்க ஒந்துராசைத் தமது நடவடிக்கைகளின் தளமாகப் பயன்படுத்தியது. 2009-ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மனுவேல் செலாயாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. அடுத்தடுத்த 2013, 2017 அரசுத்தலைவர் தேர்தல்களில் தேர்தல் மோசடி பற்றிய கூற்றுகளிலிருந்து சர்ச்சை எழுந்தது.[15][16] 2021-ஆம் ஆண்டில், சியோமாரா காசுட்ரோ அரசுத்தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அமெரிக்காவின் மோசடி மற்றும் தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நாசுரி அசுபுரா 2025 தேர்தலில் வெற்றி பெற்றார்.[17]

ஒந்துராசு சுமார் 112,492 சதுரகிமீ (43,433 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.10[18][19] இதன் வடக்குப் பகுதிகள் மேற்கு கரிபிய மண்டலத்தின் ஒரு பகுதியாகும், இது இப்பகுதியின் மக்கள்தொகை மற்றும் கலாச்சாரத்தில் பிரதிபலிக்கிறது. ஒந்துராசு அதன் வளமான இயற்கை வளங்களுக்காகவும், கனிமங்கள், காப்பி, வெப்பமண்டலப் பழங்கள், கரும்பு உள்ளிட்ட சர்வதேச சந்தைக்கு சேவை செய்யும் அதன் வளர்ந்து வரும் துணித் தொழிலுக்காகவும் அறியப்படுகிறது. ஒந்துராசு ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, நடு அமெரிக்க நாடாளுமன்றம், நடு அமெரிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு, நடு அமெரிக்கப் பாதுகாப்பு ஆணையம், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், சிறிய நாடுகளின் மன்ற ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.[20]

குறிப்புகள்

[தொகு]
  1. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு
  2. மத்திய அமெரிக்க கூட்டாட்சி குடியரசின் பகுதியாக.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Derechos Humanos - El Caso de Honduras" (PDF) (in ஸ்பானிஷ்). National Democratic Institute. 2017. p. 37. Retrieved 2025-05-21.
  2. "Honduras". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.). நடுவண் ஒற்று முகமை. Retrieved 22 June 2023. (Archived 2023 edition)
  3. 3.0 3.1 3.2 3.3 "World Economic Outlook Database, October 2025 Edition. - Data Mapper - Honduras". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 10 October 2025. Retrieved 17 December 2025.
  4. "Gini Index coefficient". CIA World Factbook. Archived from the original on 17 July 2021. Retrieved 12 August 2021.
  5. "Human Development Report 2023/2024" (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Retrieved 6 May 2025.
  6. "Date Format by Country 2025". Retrieved 2025-07-17.
  7. Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, ISBN 9781405881180
  8. "Mosquito Coast". Encyclopædia Britannica (Britannica Concise Encyclopedia) இம் மூலத்தில் இருந்து 29 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929141401/http://concise.britannica.com/ebc/article-9372678/Mosquito-Coast. 
  9. "Climate-Related Disaster Opens a Window of Opportunity for Rural Poor in Northeastern Honduras". Proceedings of the National Academy of Sciences of the United States of America 108 (13): 5203–5208. 2011. doi:10.1073/pnas.1014123108. பப்மெட்:21402909. Bibcode: 2011PNAS..108.5203M. 
  10. "Human Development Report 2016: Human Development for Everyone" (PDF). Archived (PDF) from the original on 25 February 2021. Retrieved 26 November 2017.
  11. "Honduras: El 73% de los habitantes del país son pobres, según el Instituto Nacional de Estadísticas • Semanario Universidad". semanariouniversidad.com. 2022-07-13.
  12. Merrill, Tim, ed. (1995). "War with El Salvador". Honduras. Library of Congress Country Studies. Archived from the original on 5 March 2016. Retrieved 9 February 2016.
  13. Redacción. "Honduras, el país con mayor desigualdad de América Latina". www.laprensa.hn.
  14. "The World Factbook – Central Intelligence Agency". www.cia.gov (in ஆங்கிலம்). Archived from the original on 11 April 2021. Retrieved 26 November 2017.
  15. Ruhl, J. Mark (1984). "Agrarian Structure and Political Stability in Honduras". Journal of Interamerican Studies and World Affairs 26 (1): 33–68. doi:10.2307/165506. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1937. https://www.jstor.org/stable/165506. பார்த்த நாள்: 24 August 2019. 
  16. Lemoine, Maurice (2025-11-01). "Honduras: the left tests its limits in power". Le Monde diplomatique. Retrieved 2025-12-10.
  17. Rogero, Tiago (2025-12-09). "Honduras president alleges ‘electoral coup’ under way amid Trump ‘interference’" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2025/dec/09/honduras-president-alleges-electoral-coup-under-way-amid-trump-interference. 
  18. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
  19. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
  20. 50 Years of Singapore and the United Nations. World Scientific. 2015. ISBN 978-981-4713-03-0..

வெளி இணைப்புகள்

[தொகு]

15°00′N 86°30′W / 15.000°N 86.500°W / 15.000; -86.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒந்துராசு&oldid=4452285" இலிருந்து மீள்விக்கப்பட்டது