ஒண்டிவீரன் பகடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒண்டிவீரன் பகடை[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டு சேவல் பாளையத்தை ஆண்ட குறு நில மன்னன் புலித்தேவனின் பிரதான தளபதியாக விளங்கியவர் ஒண்டிவீரன் பகடை ஆவர் .1767ல் ,ஆங்கிலேர்கள் புலித்தேவனின் கோட்டையை முற்றுகையிட்டனர் .அப்பொழுது ஆங்கிலேயரின் படைமுகாமிற்குள் நுழைந்து கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்தார் .ஒருநாள் இரவு படைவீட்டுக்குள் நுழைந்த ஒண்டிவீரன் பகடை முதலில் வெண்கல நகராவை எடுத்து தன முதுகில் கட்டிக்கொண்டார் .பட்டாக்கத்திதியையும் கையில் எடுத்துக்கொண்டார் .பின்னர் புலித்தேவன்கோட்டையை நோக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த அணைத்து பீரங்கி குழாய்களை யும் ஆங்கிலேர்களின் முகாமை நோக்கி திருப்பிவைத்தார் .எதிர்பாராத சூழ்நிலையில் ஆங்கிலேயரிடம் மாட்டிக்கொண்டார் அப்பொழுது குதிரையின் கடிவாளத்தில் மாட்டிக்கொண்ட தனது இடதுகையை தானே வெட்டிக்கொண்டு தனது முதுகிலிருந்த வெண்கல நகராவை வலதுகையால் எடுத்து முழங்கினார் .வெங்கலநகராவின் ஒலியைக்கேட்ட ஆங்கிலேயர்கள் பீரங்கிகளை உடனே இயக்கினர் .பீரங்கிகள் ஆங்கிலேயர் முகாம் நோக்கி இருந்ததால் முகாம் தீ பற்றிக்கொண்டது . தனது ஒரு கையை இழந்துவிட்டநிலையிலும்ஆங்கிலேயர் முகாமிற்கு பெரும் சேதம் ஏற்படுத்திவிட்டு உறுதி தளராமல் பட்டாக்கத்தியை கையில் பிடித்தவாறு புலித்தேவனை அடைந்து அவரிடம் பட்டாக்கத்தியை ஒப்படைத்து உயிர் துறந்தார் .

மேற்கோள்[தொகு]

தென்னிந்திய புரட்சியாளர்கள் -அ .செல்வமணி ,2011,பாவை அச்சகம் ,சென்னை

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்டிவீரன்_பகடை&oldid=2377109" இருந்து மீள்விக்கப்பட்டது