ஒட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

' ஒட்டுக்கள் ' தற்காலத் தமிழில் பெயர், வினை தவிர ஓட்டுக்களும் வழக்கிலுள்ளன. இவற்றை அடைகள் எனவும் கூறுவதுண்டு.

வகைகள்[தொகு]

  1. முன்னொட்டு
  2. உள் ஒட்டு
  3. பின்னொட்டு என மூவகை உள்ளன.

முன்னொட்டு[தொகு]

சொல்லுக்கு முன் சேர்த்துக்கொள்ளப்படுவது முன்னொட்டு அல்லது முன்னடை ஆகும்.

சான்று[தொகு]

  1. மரியாதை > அவமரியாதை
  2. மானம் > அவமானம்
  3. நீதி > அநீதி

எதிர்மறையைக் குறிக்க அவ, அ என்ற முன்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன.

உள் ஒட்டு[தொகு]

உள் ஒட்டுகள் தமிழில் இல்லை.

பின்னொட்டு[தொகு]

சொல்லுக்குப் பின் சேர்க்கபடுவது பின்னொட்டு அல்லது பின்னடை ஆகும்.

சான்று[தொகு]

  1. பெரியாரும் ராஜாஜியும் நண்பர்கள்.
  2. மற்றவர்களும் இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

உம் என்ற பின்னொட்டு வைத்துள்ளது.

இவையல்லாமல் ஓ , ஆவது போன்ற பின் ஒட்டுக்களும் உள்ளன.

ஓ என்னும் பின்னொட்டு[தொகு]

  1. நீ அங்கே போவாயோ ?
  2. கலைஞர் வள்ளுவர் கோட்டம் அமைத்தாரோ ?

ஆவது என்னும் பின்னொட்டு[தொகு]

  1. இரண்டாவது பேசியவர் முதலமைச்சர்.
  2. நான் எங்கேயாவது செல்கிறேன்.
  3. அவராவது கூறியிருக்கலாம்.

இவ்வாறு வளர்ந்து வரும் சமுதாய மாறுதலுக்கேற்ப மொழியும் மாற்றமடைந்து கொண்டே வருகிறது.

பார்வை நூல்[தொகு]

தமிழ் மொழி வரலாறு, டாக்டர். சு. சக்திவேல், மெய்யப்பன் பதிப்பகம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுக்கள்&oldid=3724186" இலிருந்து மீள்விக்கப்பட்டது