ஒடோகோனோகோ
| அசல் பெயர் | 男の娘 |
|---|---|
| உரோமாஜி | Otokonoko |
| தோற்றம் | 1990கள், ஜப்பான் |
| வகை | ஒடாகு சப்-கலாச்சாரம், மாற்றுடை அணிதல் |
ஒடோகோனோகோ (யப்பானிய: 男の娘; உரோமாஜி: Otokonoko;) என்பது பெண் போன்ற தோற்றத்தைக் கொண்ட சிறுவர்கள் அல்லது இளம் ஆண்களைக் குறிக்கும் ஒரு ஜப்பானிய கலாச்சார மற்றும் இணையச் சொல்லாகும். இது முதன்மையாக ஜப்பானிய அனிமே, மங்கா மற்றும் ஒடாகு கலாச்சாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]
சொல் விளக்கம்
[தொகு]"ஒடோகோனோகோ" என்ற சொல் ஜப்பானிய மொழியில் "சிறுவன்" என்று பொருள்படும். [2]ஒடோகோ நோ கோ என்ற வார்த்தையின் அடிப்படையிலான ஒரு சொல் விளையாட்டு ஆகும்.

பண்புகள்
[தொகு]- தோற்றம்: இவர்கள் உயிரியல் ரீதியாக ஆண்களாக இருந்தாலும், வரைகலை மற்றும் மங்காக்களில் பெண் உடைகள், நீண்ட தலைமுடி மற்றும் பெண்மைக்கே உரிய மென்மையான குரல் மற்றும் குணாதிசயங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்கள்.
- பாலின அடையாளம்: இக்கலாச்சாரம் குறிப்பிட்ட பாலின ஈர்ப்பு அல்லது அடையாளத்துடன் நேரடியாகத் தொடர்புடையது அல்ல. இது ஒரு கலை மற்றும் பாணி வடிவமாகவே பார்க்கப்படுகிறது.
பாப் கலாச்சாரத்தில்
[தொகு]2000களின் பிற்பகுதியில் இருந்து, ஜப்பானிய பாப் கலாச்சாரத்தில் ஒடோகோனோகோ கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கென பிரத்யேக மங்கா இதழ்கள் மற்றும் பணிப்பெண் உணவகங்கள் ஜப்பானில் தொடங்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் வெளியான சென்பாய் இஸ் அன் ஒடோகோனோகோ போன்ற அனிமே தொடர்கள் இந்த சப்-கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளன.
காமக் கூறு
[தொகு]ஒடோகோனோகோ என்பது பெண் தோற்றமுடைய அல்லது பெண் மாற்றுடை அணியும் ஆண்களைப் பற்றிய ஒரு ஊடக மற்றும் புனைகதை வகையையும் குறிக்கும். இந்த வகை கதைகள் பெரும்பாலும் காதல் அல்லது காமக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Otokonoko : des garçons trop mignonnes". Vice. 8 August 2013 இம் மூலத்தில் இருந்து Mar 22, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200322002939/https://www.vice.com/fr/article/5gxd8d/otokonoko-des-garcon-trop-mignonnes.
- ↑ 森友, ひい子 (2 June 2014). "「男の娘」「女装子」と呼ばれる人々 "中性化受け入れ"円満な夫婦の鍵 〈週刊朝日〉" (in ja-JP). AERA dot. (アエラドット). https://dot.asahi.com/wa/2014053000082.html.