ஒடெசா தேசிய அறிவியல் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுடியர் தெரு 13 இல் பிரதான நுழைவாயில்

ஒடெசா தேசிய அறிவியல் நூலகம் (Odessa National Scientific Library) உக்ரைன் நாட்டில் 1829 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பொது நூலகம் ஆகும்.[1] நூலகம் 1907 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டடமானது கட்டிடக் கலைஞர் ஃபியோடர் நெசுடுர்க் என்பவரால் புதிய கிரேக்க பாணியில் வடிவமைத்து கட்டப்பட்டதாகும்.[1] வரலாறு முழுவதும் ஒடெசா தேசிய அறிவியல் நூலகம் பலமுறை பெயர் மாற்றப்பட்டு, 2015 ஆண்டு தற்போதைய பெயருக்கு வந்துள்ளது. ஒடெசா தேசிய அறிவியல் நூலகத்தில் 200,000 அரிய பதிப்புகள் உட்பட 5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.[2] தெற்கு உக்ரைனின் முன்னணி சமூக-கலாச்சார மையமாகவும், நூலக அறிவியல், நூலியல், ஆவண மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி முறை மற்றும் ஒருங்கிணைப்பு மையமாக செயற்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Odessa National Scientific Library is a leading cultural center of Ukraine", in The Odessa Journal, 31 October 2020
  2. ODNB: "Library Collections", retrieved 20 March 2022

புற இணைப்புகள்[தொகு]