உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடிய திரைப்படக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடிய திரைப்படக் கொள்கை (Odia film Policy) 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி ஒடிசா மற்றும் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத் தலங்களை தங்கள் படங்களில் ஊக்குவிக்கும் ஆங்கிலம், இந்தி அல்லது பிற மொழிப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு 2.5 கோடி வரை மானியம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.[1] ஒடிசாவில் படப்பிடிப்புக்கு திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.[2] படப்பிடிப்பின் எளிமையை அதிகரிக்கவும், தொடர்புடைய நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்கவும், 2019 ஆம் ஆண்டு ஒடிசா மாநில திரைப்படக் கொள்கை வழிவகுக்கிறது. மாநிலத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு ஒற்றை சாளர ஒப்புதல் செயல்முறையை செயல்படுத்தவும் இக்கொள்கை முன்மொழிகிறது. திரைப்பட நகரங்கள், பன்மையாக்கக் கட்டிடங்கள் மற்றும் திரைப்பட அரங்குகளுக்கான அனைத்து முன்மொழிவுகளும் முதலீட்டாளர்கள் வசதிக்காக அரசாங்கத்தின் ஒற்றை சாளரத்தின் மூலம் எளிதாக்கப்படும்.[3]

திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஒடிய திரைப்படங்களில் அழகியல் சிறப்பம்சங்கள், உயர் தொழில்நுட்பத் தரங்கள் மற்றும் சமூகத் தொடர்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கூடுதல் தகுதியுள்ள ஒடியா மொழித் திரைப்படங்களுக்கு ரூ .4 கோடி வரை மானியம் வழங்கப்படும் என்றும் இக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது .[4]

குறிக்கோள்கள்

[தொகு]

ஒடிசா மாநில திரைப்படக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் :[5]

  • தரமான ஒடியா படங்களை ஊக்குவிக்க.
  • மாநிலத்தில் திரைப்பட சுற்றுலாவை எளிதாக்க.
  • ஒடிசாவை படப்பிடிப்புக்கான இடமாக கொண்டு வர.

ஆதரவு

[தொகு]
  • ஒடிசாவில் படமாக்கும் படங்களுக்கு ஒற்றை சாளர ஒப்புதல் செயல்முறை வழங்கப்படும்.
  • முதலீட்டாளர்கள் ஒப்புதல் மற்றும் அனுமதிகளுக்காக கோசுவிப்ட்டு தளத்தின் மூலம் விண்ணப்பிப்பார்கள்.
  • ஒடிசாவில் படப்பிடிப்புக்கு திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க குறிப்பிட்ட மானியம் வழங்கப்படும்.

ஊக்கத்தொகை

[தொகு]

ஒடிசாவில் திரைப்பட நகரங்கள், சினிமா அரங்குகள் மற்றும் பன்மையாக்கள் வளர்ச்சிக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும்:

  • மூலதன முதலீட்டு மானியம்
  • நில ஒதுக்கீடு
  • வட்டி மானியம்
  • முத்திரை வரி விலக்கு
  • நில மாற்றத்திற்கான கட்டணங்களை திருப்பிச் செலுத்துதல்
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி திரும்பப் பெறுதல்
  • மின்சாரக் கட்டணத்தில் விலக்கு
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மானியம்
  • திரைப்பட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New film policy to promote Odia cine industry". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
  2. "To promote odia cinema". Times of india. 26 March 2019.
  3. "multiplexes and cinema halls will be facilitated". OTv. 26 March 2019. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "multiplexes and cinema halls will be facilitated". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 26 March 2019.
  5. "Objevtive". Odisha Government. 26 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிய_திரைப்படக்_கொள்கை&oldid=3928373" இலிருந்து மீள்விக்கப்பட்டது