ஒடிசா மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடிசாவின் மாவட்டங்கள்
ஒடிசாவின் மாவட்டங்கள்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்ஒடிசா
எண்ணிக்கை30 மாவட்டங்கள்
மக்கள்தொகைதேவ்கட் – 3,12,520 (மிக குறைந்த); கஞ்சாம் – 35,29,031 (மிக உயர்ந்த)
பரப்புகள்ஜகத்சிம்மபூர் – 1,668 km2 (644 sq mi) (மிக குறைந்த); மயூர்பஞ்சு – 10,418 km2 (4,022 sq mi) (மிக உயர்ந்த)
அரசுஒடிசா அரசு

ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களின் பட்டியல் (List of districts of Odisha) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களை பட்டியலிடுகிறது. ஒடிசா மாநிலம் 30 நிர்வாக புவியியல் அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [1] [2] [3] இந்த 30 மாவட்டங்கள் தங்கள் நிர்வாகத்தை சீராக்க மூன்று வெவ்வேறு வருவாய் கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, வடக்கு மற்றும் தெற்கு கோட்டம் என்பன அம்மூன்று கோட்டங்களாகும். மத்திய கோட்டத்திற்கு கட்டாக் நகரமும் , வடக்கு கோட்டத்திற்கு சம்பல்பூர் நகரமும், தெற்கு கோட்டத்திற்கு பெர்காம்பூர் நகரமும் தலைமையிடங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கோட்டமும் 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளன. இந்திய ஆட்சிப் பணியின் மூத்த அதிகாரி ஒருவர் வருவாய் கோட்ட ஆணையராக கோட்டத்தை நிர்வகிக்கிறார். நிர்வாக வரிசையில் கோட்ட வருவாய் ஆணையரின் நிலை மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநில செயலகத்திற்கும் இடையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஆட்சியர் இந்திய ஆட்சிப் பணிலிருந்து நியமிக்கப்படுகிறார். ஆட்சியர் & மாவட்ட குற்றவியல் நீதிபதி நிலையில் இருப்பவருக்கு வருவாய் சேகரித்தல் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் துணை-கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு துணை-ஆட்சியர் மற்றும் துணை-குற்றப்பிரிவு நீதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது . துணை கோட்டங்கள் மேலும் தாலுக்காக்களாகப் பிரிக்கப்படுகின்றன. தாலுக்காக்களை தாசில்தார்கள் தலைமையில் செயற்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் 3 கோட்டங்கள், 30 மாவட்டங்கள், 58 துணை-கோட்டங்கள் , 317 தாலுக்காக்கள் மற்றும் 314 வட்டாரங்கள் உள்ளன.

கோட்டங்கள் அடிப்படையில் மாவட்டங்களின் பட்டியல்[தொகு]

ஒடிசா மாவட்டங்களின் வரைபடம்.
  வடக்கு
  மத்திய
  தெற்கு

ஒடிசாவின் 30 மாவட்டங்கள் தங்கள் நிர்வாகத்தை சீராக்க மூன்று வெவ்வேறு வருவாய் கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டங்கள் ஒவ்வொன்றும் 10 மாவட்டங்களைக் கொண்டுள்ளன. நிர்வாகத் தலைவராக வருவாய் கோட்ட ஆணையர் உள்ளார். கோட்டங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியல்:

# மத்திய வருவாய் கோட்டம் (தலைமையகம்: கட்டாக்) வடக்கு வருவாய் கோட்டம் (தலைமையகம்: சம்பல்பூர்) தெற்கு வருவாய் கோட்டம் (தலைமையகம்: பெர்காம்பூர்)
1 கட்டாக் சம்பல்பூர் கஞ்சாம்
2 ஜகத்சிம்மபூர் பர்கஃட் கஜபதி
3 கேந்திராபடா ஜார்சுகுடா கந்தமாள்
4 ஜாஜ்பூர் தேவ்கட் பௌது
5 பூரி பலாங்கீர் களாஹாண்டி
6 கோர்த்தா சுபர்ணபூர் நூவாபடா
7 நயாகட் டேங்கானாள் கோராபுட்
8 பாலேசுவர் அனுகோள் ராயகடா
9 பத்திரக் கேந்துசர் நபரங்குபூர்
10 மயூர்பஞ்சு சுந்தர்கட் மால்கான்கிரி

நிர்வாகம்[தொகு]

ஆட்சியர் & மாவட்ட குற்றவியல் நீதிபதி ஒரு மாவட்டத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பு வகிக்கிறார். இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்புடைய பிரச்சினைகளை பராமரிக்கும் பொறுப்பு வகிக்கிறார்.

மாவட்டங்கள்[தொகு]

ஒடிசாவில் 30 மாவட்டங்கள் உள்ளன. மயூர்பஞ்ச் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். ஜகத்சிம்மபூர் பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் கஞ்சம் மிகப்பெரிய மாவட்டம் ஆகவும் தேவ்கட் சிறிய மாவட்டமாகவும் விளாங்குகின்றன. ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேசுவர் கோர்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 30 மாவட்டங்களின் பகுதிகளும் மக்கள் தொகையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: [4][5]

குறியீடு மாவட்டங்கள் தலைநகரங்கள் மக்கள் தொகை
(2011 கணக்கீடு[6])
பரப்பளவு (கி.மீ²) அடர்த்தி
2011 (/கி.மீ²)
வரைபடம்
1 அனுகோள் அனுகோள் 12,73,821 6,376 199.8
2 பௌது பௌது 4,41,162 3,098 142.4
3 பலாங்கீர் பலாங்கீர் 16,48,997 6,575 250.8
4 பர்கஃட் பர்கஃட் 14,81,255 5,837 253.8
5 பாலேசுவர் பாலேஸ்வர் 23,20,529 3,806 609.7
6 பத்திரக் பத்ரக் 15,06,522 2,505 601
7 கட்டக் கட்டக் 26,24,470 3,932 667.5
8 தேவ்கட் தேபகட் 3,12,520 2,940 106.3
9 டேங்கானாள் டேங்கானாள் 11,92,811 4,452 267.9
10 கஞ்சாம் பெர்காம்பூர் 35,29,031 8,206 430.1
11 கஜபதி பரலகேமுண்டி 5,77,817 4,325 133.6
12 ஜார்சுகுடா ஜார்சுகுடா 5,79,505 2,114 274.1
13 ஜாஜ்பூர் ஜாஜ்பூர் 18,27,192 2,899 595.8
14 ஜகத்சிம்மபூர் ஜகத்சிம்மபூர் 11,36,971 1,668 681.6
15 கோர்த்தா கோர்த்தா 22,51,673 2,813 800.5
16 கேந்துசர் கேந்துசர் 18,01,733 8,303 217.0
17 களாகண்டி பவானிபட்டணம் 15,76,869 7,920 199.1
18 கந்தமாள் புல்பாணி 7,33,110 8,021 91.4
19 கோராபுட் கோராபுட் 13,79,647 8,807 156.7
20 கேந்திராபடா கேந்திராபடா 14,40,361 2,644 544.8
21 மால்கான்கிரி மால்கான்கிரி 6,13,192 5,791 105.9
22 மயூர்பஞ்சு பரிபடா 25,19,738 10,418 241.9
23 நபரங்குபூர் நபரங்குபூர் 12,20,946 5,291 230.8
24 நூவாபடா நூவாபடா 6,10,382 3,852 158.5
25 நயாகட் நயாகட் 9,62,789 3,890 247.5
26 பூரி பூரி 16,98,730 3,479 488.3
27 ராயகடா ராயகடா 9,67,911 7,073 136.8
28 சம்பல்பூர் சம்பல்பூர் 10,41,099 6,624 157.2
29 சுபர்ணபூர் சுபர்ணபூர் 6,10,183 2,337 261.1
30 சுந்தர்கட் சுந்தர்கட் 20,93,437 9,712 188
ஒடிசா புவனேசுவர் 4,19,74,218 1,55,707 269.6

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Districts of Odisha". Bhubaneswar: Government of Odisha. http://orissa.gov.in/portal/dist.asp. 
  2. "Districts of Orissa" இம் மூலத்தில் இருந்து 16 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120116131947/http://dolr.nic.in/Hyperlink/distlistnew.htm#orissa. 
  3. "List of Districts" (pdf). http://orissa.gov.in/e-magazine/orissaannualreference/OR-Annual-2009/pdf/587-593.pdf. 
  4. "Administrative Unit". Revenue & Disaster Management Department, Government of Odisha இம் மூலத்தில் இருந்து 21 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130821033240/http://www.odisha.gov.in/revenue/web/AdministrativeUnit.asp?GL=2. 
  5. The Office of Registrar General and Census Commissioner of India.
  6. "List of districts of Orissa". http://www.census2011.co.in/census/state/districtlist/orissa.html. 

புற இணைப்புகள்[தொகு]