ஒச்சாயி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒச்சாயி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஒச்சாயி
இயக்கம்ஒ. ஆசைத்தம்பி
தயாரிப்புதிரவியபாண்டியன்
நடிப்புதயா
தாமரை
ராஜேஷ்
ஒ. முருகன், கன்சாகருப்பு
சந்தான பாரதி
திரவிய பாண்டியன்
சகிலா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒச்சாயி (Ochaayi- Tamil movie) 2010ம ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஆச்சிகிழவி திரைக்கூடம் திரவியபாண்டியனின் தயாரிப்பில் உருவான முதல் படம் 'ஒச்சாயி'. இதனை இயக்கியவர் ஒ. ஆசைத்தம்பி

ஒச்சாயி என்பது மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கருமாத்தூர், தும்மக்குண்டு போன்ற ஊரில் உள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தின் குலதெய்வத்தின் பெயர் ஒச்சாயி. இப்படம் ஒரு மனிதன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவின் விளைவு எப்படி குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதைக் கதையாகக் கொண்டுள்ளது.

இத்திரைப்படத்தில் தயா, தாமரை என்ற புதுமுகங்களும், ராஜேஷ், ஒ. முருகன், கன்சாகருப்பு, சந்தான பாரதி, திரவிய பாண்டியன், சகிலா ஆகியோர் நடித்துள்ளார்கள். பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜீவராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களை சினேகன், ஆசைதம்பி ஆகியோர் எழுதியுள்ளார்கள். ஒச்சாயி திரைப்படத்தை ஒமுரு என்ற ஒ. முருகன் நிர்வாக தாயாரிப்பில் உருவாக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

[1] www.mothertamil.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒச்சாயி_(திரைப்படம்)&oldid=2704003" இருந்து மீள்விக்கப்பட்டது