ஒசு பிராந்தியம்

ஆள்கூறுகள்: 40°0′N 73°0′E / 40.000°N 73.000°E / 40.000; 73.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓஷ் பிராந்தியம்
Ош облусу
Oş oblusu
Region
ஓஷ் பிராந்தியம்-இன் கொடி
கொடி
ஓஷ் பிராந்தியம்-இன் சின்னம்
சின்னம்
கிர்கிஸ்தானின் வரைபடத்தில், ஓஷ் பிராந்தியத்தின் அமைவிடம்.
கிர்கிஸ்தானின் வரைபடத்தில், ஓஷ் பிராந்தியத்தின் அமைவிடம்.
ஆள்கூறுகள்: 40°0′N 73°0′E / 40.000°N 73.000°E / 40.000; 73.000
நாடு கிர்கிசுத்தான்
தலைநகரம்ஓஷ் நகரம்
அரசு
 • ஆளுநர்தாலிபெக் சரிபாஷேவ்
பரப்பளவு
 • மொத்தம்28,934 km2 (11,171 sq mi)
மக்கள்தொகை
 (2020-01-01)[1]
 • மொத்தம்13,68,054
 • அடர்த்தி47/km2 (120/sq mi)
நேர வலயம்ஒசநே+6 (East)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (not observed)
ஐஎசுஓ 3166 குறியீடுKG-O
மாவட்டங்கள்8
நகரங்கள்3
நகரியங்கள்2
சிற்றூர்கள்474

ஓஷ் பிராந்தியம் (Osh Region, கிருகிசு மொழி : Kyrgyz , Oş oblusu / Osh oblusu, وش وبلاستى) என்பது கிர்கிஸ்தானின் ஒரு மாகாணம் ( ஒப்லாஸ்ட் ) ஆகும். இதன் தலைநகரம் ஓஷ் நகரம் ஆகும். இது (கடிகார சுற்றில்) ஜலால்-அபாத் பிராந்தியம், நார்ன் பிராந்தியம், சீனாவின் சிஞ்சியாங், தஜிகிஸ்தான், பேட்கன் பிராந்தியம், உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.

நிலவியல்[தொகு]

பெர்கானா பள்ளத்தாக்கின் விளிம்பில் உள்ள ஒப்லாஸ்டின் தட்டையான வடக்கு பகுதியில் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர். நிலம் படிப்படியாக தெற்கே அலே மலைகளின் முகடு வரை உயர்ந்து, அலே பள்ளத்தாக்கில் இறங்கி, தஜிகிஸ்தானின் எல்லையாக உள்ள டிரான்ஸ்-அலாய் மலைத்தொடராக உயர்கிறது. கிழக்கில், நிலம் நர்ன் எல்லைக்கு இணையாக இருக்கும் ஃபெர்கானா மலைத்தொடராக உயர்கிறது. ஃபெர்கானா பள்ளத்தாக்கில் சிர் தாரியாவை உருவாக்கும் நரியன் ஆற்றில் சேர வடமேற்கே பாயும் கார தர்யாவ ஆறு இந்த பிராந்தியம் வழியாக பாய்கிறது.

நெடுஞ்சாலை எம்41 ஓஷ் முதல் தாஜிக் எல்லை வரை மலைகளுக்கு தெற்கே செல்கிறது. சாரி-தாஷ் ஊரில் ஒரு கிளைச் சாலை கிழக்கே இர்கேஷாம் எல்லையைக் கடந்து சீனாவுக்குச் செல்கிறது. மற்ற பிரதான சாலை மேற்கில் சமதளம் வழியாக பேட்கன் பிராந்தியத்திற்கு செல்கிறது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஓஷ் பிராந்தியத்தில் (ஓஷ் நகரம் தவிர) 3 நகரங்கள் ( நூக்காட், உஸ்கென், காரா-சூ ), 2 நகர்ப்புற வகை குடியேற்றங்கள் மற்றும் 474 கிராமங்களை உள்ளன. 2009 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி, இதன் உண்மையான மக்கள் தொகை 999,576 ஆகும். மக்களில் 82,841 பேர் நகர்ப்புறங்களிலும், 916,735 பேர் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர். [2] 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை மதிப்பீடு 1,368,054 என இருந்த‍து. [1]

கிர்கிஸ்தானில் வாழும் உஸ்பெக்கியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓஷ் பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.  2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்கள் பிராந்திய மக்கள்தொகையில் 28% உள்ளனர். [2]

Historical populations in Osh Region
ஆண்டும.தொ.±%
19704,33,036—    
19795,52,843+27.7%
19897,16,983+29.7%
19999,40,633+31.2%
20099,99,576+6.3%
Note: enumerated de facto population; Source:[2]

இன அமைப்பு[தொகு]

2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஓஷ் பிராந்தியத்தின் இன அமைப்பு : [2]

இனக்குழு மக்கள் தொகை மக்கள்தொகை விகிதம்
கிர்கிசுகள் 7,58,036 68.6%
உஸ்பெக்கியர் 3,08,688 28.0%
உய்குர் மக்கள் 11,181 1%
துருக்கிய மக்கள் 10,934 1%
தஜிக்குகள் 6,711 0.6%
அசர்பைஜானியர்கள் 3,224 0.3%
உருசியர்கள் 1,552 0.1%
தாதர்கள் 1,337 0.1%
டங்கன்கள் 793 0.1%
பிற இனத்தினர் 1,792 0.2%

மாவட்டங்கள்[தொகு]

ஓஷ் பிராந்தியம் நிர்வாக ரீதியாக 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (எதிர்-கடிகார சுற்றில் பட்டியலிடப்பட்டுள்ளது): [3]

மாவட்டம் தலைநகரம் இடம்
உஸ்ஜென் மாவட்டம் உஸ்ஜென் வடக்கு 1
காரா-சூ மாவட்டம் காரா-சூ வடக்கு 2
அரவன் மாவட்டம் அரவன் வடக்கு 3
நூக்காட் மாவட்டம் எஸ்கி-நூக்காட் மேற்கு
சோங்-அலே மாவட்டம் டாரூட்-கோர்கன் தென்மேற்கு
அலே மாவட்டம் குல்ச்சா தென்கிழக்கு
காரா-குல்ஜா மாவட்டம் காரா-குல்ஜா கிழக்கு

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Population of regions,districts, towns, urban-type settlements, rural communities and villages of Kyrgyz Republic (National Statistical Committee estimate as of the beginning of 2020) Численность населения областей, районов, городов, поселков городского типа,айылных аймаков и сел Кыргызской Республики (оценка НСК на начало 2020г)
  2. 2.0 2.1 2.2 2.3 Population and Housing Census 2009. Book 3 (in tables). Regions of Kyrgyzstan: Osh Region (Перепись населения и жилищного фонда Кыргызской Республики 2009. Книга 3 (в таблицах). Регионы Кыргызстана: Ошская область (PDF), Bishkek: National Committee on Statistics, 2010, archived from the original (PDF) on 2011-08-10
  3. "Kyrgyzstan - Джалал-Абадская область". Archived from the original on 2009-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசு_பிராந்தியம்&oldid=3546868" இலிருந்து மீள்விக்கப்பட்டது