ஒசாமு தெசூகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசாமு தெசூகா
Osamu Tezuka 1951 Scan10008-2.JPG
1951இல் தெசூகா
பிறப்பு (手塚 治 தெசூகா ஒசாமு?)
நவம்பர் 3, 1928( 1928 -11-03)
டொயொனாகா, ஒசாகா, சப்பான்
இறப்பு9 பெப்ரவரி 1989(1989-02-09) (அகவை 60)
டோக்கியோ, சப்பான்
குடிமகன்சப்பானியர்
துறை (கள்)
  • கேலிப்பட ஓவியர்
  • அசைவூட்டப் படக்கலைஞர் (அனிமேட்டர்)
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • மருத்துவர்
கவனிக்கத் தக்க வேலைகள்
  • அஸ்ட்ரோ பாய்
  • கிம்பா தி ஒயிட் லயன்
  • ஃபீனிக்ஸ்
  • பிளாக் ஜாக்
துணைஎட்சூகோ ஒகாடா
(m. 1959–89)


Influenced
  • அகிரா தோரியாமா, ஹயாவோ மியாசாகி, சதோசி கோன், கட்சுஹிரோ ஓடோமோ

ஒசாமு தெசூகா (手塚 治虫, born 手塚 治 தெசூகா ஒசாமு ?, நவம்பர் 3, 1928 – பிப்ரவரி 9, 1989) என்பவர் சப்பானிய மாங்கா கலைஞரும், கேலிப்பட ஓவியரும், அசைவூட்டப் படக்கலைஞரும், திரைப்படத் தயாரிப்பாளரும், களச்செயல்பாட்டாளரும் ஆவார். ஒசாகா மாநிலத்தில் பிறந்த இவர், அஸ்ட்ரோ பாய், கிம்பா தி ஒயிட் லயன், பிளாக் ஜாக் போன்ற வரைகதை (காமிக்ஸ்) தொடர்களைப் படைத்ததன் பொருட்டு நன்கு அறியப்படுகிறார். அவர் குன்றாத ஊக்கத்துடன் படைப்புகளை ஏராளமாக உருவாக்கியமை, தொழில்நுணுக்கங்களில் முன்னோடியாகச் செயல்பட்டமை, பல்வேறு வகைமைகளைப் புதுமையாக மறுவரையறை செய்தமை ஆகிய காரணங்களுக்காக "மாங்காவின் தந்தை", "மாங்காவின் ஞானத்தந்தை", "மாங்காவின் கடவுள்" என்றெல்லாம் போற்றப்படுகிறார். மேலும், அவரது தொடக்க நாட்களில் தமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த வால்ட் டிஸ்னிக்கு இணையான ஒரு சப்பானியராகவே கருதப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tezuka Osamu Monogatari, Tezuka Productions, 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசாமு_தெசூகா&oldid=2210449" இருந்து மீள்விக்கப்பட்டது