ஒங்கள போடணும் சார்
| ஒங்கள போடணும் சார் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சிறீஜித் விஜயன் |
| தயாரிப்பு | ரமேஷ் பெரிந்தல்மனை |
| கதை | சிவா அஞ்சால், சாஜித் S. ஈசாக் |
| இசை | ரெஜிமோன் |
| நடிப்பு | ஜித்தன் ரமேஷ் சனுஜா சோம்நாத் ஜோனிகா தோடா அனு நாயர் பாரிஜாதா சின்கா வைசாலி |
| ஒளிப்பதிவு | எஸ். செல்வகுமார் |
| படத்தொகுப்பு | விஷ்ணு நாரயணன் |
| கலையகம் | ஷேடோபாக்ஸ் புரொடக்ஷன்ஸ் , சிக்மா பிலிம்ஸ் |
| வெளியீடு | 13 செப்டம்பர் 2019 |
| ஓட்டம் | 100 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒங்கள போடணும் சார் (Ongala Podanum Sir) ஆர். எல். ரவி மற்றும் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான பாலியல் திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் ஐந்து அறிமுக நடிகைகளுடன் முக்கிய வேடத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.[1][2] ரெஜிமோன் இசையப்பில் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் 13 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[3][4]
தயாரிப்பு
[தொகு]பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான இது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தயாரிப்பைத் தொடங்கியது. சனவரி 2019 க்குள் முடிக்கப்பட்டது. நானும் ரௌடி தான் (2015) படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் பேசும் பிரபலமான உரையாடலைப் பெயரிட இயக்குனர்கள் ரவியும் ஸ்ரீஜித்தும் தேர்வு செய்தனர்.[5][6][7] தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் ஐந்து புதிய நடிகைகளை ஜித்தன் ரமேஷுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ரமேஷ் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார்.[8][9]
ஒலிப்பதிவு
[தொகு]படத்திற்கு ரெஜிமோன் இசையமைத்திருந்தார்.
வெளியீடு
[தொகு]இந்த படம் 13 செப்டம்பர் 2019 அன்று தமிழகம் முழுவதும் குறைவான திரையரங்குகளில் வெளியானது.[10] இந்தியன் எக்சுபிரசு அதன் விமர்சனத்தில் எதிர்மறை விமர்சனத்தை அளித்தது. மேலும் "கொடூரமான மோசமான" படம் என்று எழுதியது.[11]
சான்றுகள்
[தொகு]- ↑ "பணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்". Maalaimalar. 13 September 2019.
- ↑ "ஒங்கள போடணும் சார்". maalaimalar.com. 9 August 2019.
- ↑ "Jithan Ramesh's Adult Horror Comedy Titled 'Ongala Podanum Sir'". 23 January 2019. Archived from the original on 23 மே 2019. Retrieved 16 அக்டோபர் 2021.
- ↑ "'Ungala Podanum Sir'". Sify. Archived from the original on 2019-01-23. Retrieved 2021-10-16.
- ↑ "Jithan Ramesh returns with an adult comedy". The New Indian Express.
- ↑ Subramanian, Anupama (22 January 2019). "Nayanthara's popular dialogue now a film title". Deccan Chronicle.
- ↑ "நயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்". Maalaimalar. 21 January 2019.
- ↑ "Jithan Ramesh's adult comedy has five heroines - Times of India". The Times of India.
- ↑ "ஒங்கள போடணும் சார் - பட போஸ்டரை வெளியிட்ட ஜீவா!". Samayam Tamil.
- ↑ "Friday Fury: September 13". Sify. Archived from the original on 2019-09-13. Retrieved 2021-10-16.
- ↑ "'Ongala Podanum Sir' review: Jithan Ramesh's comeback film a god-awful vulgarfest". The New Indian Express.
