உள்ளடக்கத்துக்குச் செல்

ஒகையோ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒகையோ ஆறு , மிசிசிப்பி ஆற்று பாதைக்கு மேற்கே பிட்சுபர்க், பென்சில்வேனியா, பகுதியில்  தோன்றி  கெய்ரோ,  இலினொய்  பகுதியில்  மிசிசிப்பி ஆற்றுடன்  கலக்கிறது. அதிக நீர் கொண்டு வருவதில் இதுவே மிசிசிப்பியின் மிகப் பெரிய துணை ஆறு ஆகும். மிசிசிப்பியுடன் கூடும் இடத்தில் இதுவே பெரியதாக தோன்றும்.  (கெய்ரோவில் ஒகையோ  வினாடிக்கு 281,500 கன அட (7,960 மீ3);[1] தெப்சில் மிசிசிப்பி வினாடிக்கு: 208,200 கன அடி (5,897 மீ3)[2])  அதனால் நீரியல் முறையில் முழு ஆற்றுப் படுகைக்கும் இவ்வாறு சிறப்பு வாய்ந்ததாகும்.

இதன் நீளம் 081 மைல் (1579 கிமீ) ஆகும். இவ்வாறு ஆறு மாநிலங்களின்,எல்லையில் பாய்ந்து செல்கிறது. இதன் வடிகால் படுகை 15 மாநிலங்களில் உள்ளது. இதன் பெரிய துணை ஆறான டென்னிசி ஆறு அமெரிக்காவின் பல தென் மாநிலங்களை கடக்கிறது. மூன்று மில்லியன் மக்களுக்கு குடிநீர் மூலமாக விளங்குகிறது.[3]

பல அமெரிக்க தொல் குடிகளின் மொழியில் இதற்கு பல பெயர்கள் உண்டு இதற்கு நல்ல ஆறு என்றும் பொருள் உண்டு [4] அமெரிக்க தொல் குடிகளின்  வரலாற்றில்  இவ்வாறுக்கு  சிறப்பான  இடம்  உண்டு.  அவர்களின்  பல நாகரிகங்கள் இதன் பள்ளத்தாக்கிலேயே உருவாகின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அமெரிக்க தொல்குடிகள் போக்குவரத்திற்கும் வணிக வழியாகும் இவ்வாறை பயன்படுத்தினார்கள். அதன் பல சமூகங்கள் இவ்வாற்று வழியே இணைக்கப்பட்டிருந்தன. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் ஐரோப்பிய படையெடுப்புக்கு முன் பல குழுதலைவர்கள் மிசிசிப்பி பண்பாடு நிலத்தை உயர்த்தி கூமாச்சி வடிவ மண்\கல்\இலை மேடுகளை  கட்டியிருந்தனர், இவான்சுவில் இந்தியானா  அருகே ஏஞ்சல் மேடு இதுபோன்றதாகும்.  வார்ப்புரு:Lang-seeவார்ப்புரு:Lang-sjw

1669 இல், ,ரானே ராபர்ட் கவாலியர் , செயுர் டே லா சால்லே  தலைமையிலான ஒரு பிரஞ்சு பயணம் குழு ஒகையோ ஆற்றை முதன்முதலாக கண்டறிகிறது. இதுவே ஐரோப்பியர்கள் இதை பார்த்த முதல் நிகழ்வாகும். பிறகு ஐரோப்பிய-அமெரிக்க குடியேற்றங்களுக்கு பிறகு இவ்வாறே தற்போதுள்ள இந்தியானா,  கென்டக்கி மாநிலங்களுக்கு  எல்லையாக  விளங்குகிறது.  அமெரிக்காவை  மேற்கு  பகுதி  விரிவாக்கத்திற்கு  படைகள்  செல்ல  இவ்வாறு வழியாக பயன்பட்டது. தாமசு செவ்வர்சன் எழுதிய குறிப்பான நோட்சு ஆன் தி இசுடேட் ஆப் வர்சூனியா   1781-82  காலத்தில்  வெளியானது இதில்  அவர்  நீர்  தெளிவாக  உள்ளதாகவும்,  கற்களும்  வேகமான  ஆற்று  ஓட்டதும் நீரின் தெளிவை பாதிக்கவில்லை என்றும் இது உலகிலுள்ள  மிக அழகான  ஆறு  என்றும் குறிப்பிடுகிறார் [5]

19ஆம் நூற்றாண்டில் வடமேற்கு பகுதியின் தென் எல்லையாக ஒகையோ ஆறு இருந்தது. சில முனை இது மேரிலாந்து - பென்சில்வேனியா எல்லையை குறிக்கும் மாசன்-டிக்சன் கோட்டின் நீட்சியாக கருதப்பட்டது. அதனால் இதை அடிமைகள், விடுதலையான  நிலத்திற்கு  வரும்  எல்லைப்பகுதியாகவும்  கொள்ளலாம்.  ஆறு குறுகலாக உள்ள இடத்தை கடந்து  ஆயிரக்கணக்கான  அடிமைகள்  அடிமைத்தனம்  அற்ற  வடமாநிலங்களுக்கு  தப்பித்தனர். 

காட்சியகம்

[தொகு]

நில அமைவும் நீரமைவும்

[தொகு]
Natural-color satellite image of the Wabash-Ohio confluence.

குறிப்புகள்

[தொகு]
  1. Frits van der Leeden, Fred L. Troise, David Keith Todd: The Water Encyclopedia, 2nd edition, p. 126, Chelsea, Mich.
  2. USGS stream gage 07022000 Mississippi River at Thebes, IL (long term mean discharge)
  3. "Ohio River Facts".
  4. Bright, William (2004). Native American Placenames of the United States. University of Oklahoma Press. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806135984. OHIO River \ō hī′ ō\. From Seneca (Iroquoian) ohi:yo', a proper name derived from ohi:yo:h 'good river'.
  5. Jefferson, Thomas, 1743–1826.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகையோ_ஆறு&oldid=3260113" இலிருந்து மீள்விக்கப்பட்டது