ஒகஸ்டஸ் சீபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1873 இல் மீளமைக்கப்பட்ட சீபேசின் வடிவமைப்பு

ஒகஸ்டஸ் சீபே அல்லது கிஸ்டியன் அகஸ்டஸ் சீபே (Christian Augustus Siebe; 1788 – ஏப்ரல் 15, 1872) என்பவர் செருமனியில் பிறந்த ஒரு பிரித்தானிய பொறியியளாளர் ஆவார். இவரது நீராடிக் கருவிக்கான பங்களிப்பானது முக்கியமானது. சக்சொனி நகரில் 1788 இல் பிறந்தார். இவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி மிகச் சிறிய அளவே அறியப்பட்டுள்ளது.

நீர்மூழ்கும் துறைக்குப் பங்களிப்புகள்[தொகு]

1830 களில், டீன் சகோதரர்கள் இவரை நீர் அடியில் பயன்படும் புகை தலைக்கவசத்தின் வித்தியாசமான வடிவத்தை அமைக்குமாறு பணித்தனர். பின்னர் இவரையே அவர்கள் நிரிற்கு அடியில் பயன்படும் பல்வேறு தலைக் கவசங்களை அமைக்குமாற வேண்டிக்கொண்டனர். ஜேர்ஜ் எட்வாட் என்பவர் செய்த கருவியை மேலும் மெருகூட்டி சீபே தன்னுடைய வடிவமைப்பைத் தயாரித்துக்கொண்டார்.

ஏனைய கண்டுபிடிப்புகள்[தொகு]

1851, 1855 இல் நடந்த கண்காட்சிகளில் சீபே பல பதக்கங்களை வென்றார்.

ஏப்ரல் 15, 1872 இல் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் இலண்டனில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Acott, C. (1999). "JS Haldane, JBS Haldane, L Hill, and A Siebe: A brief resume of their lives.". South Pacific Underwater Medicine Society Journal 29 (3). ISSN 0813-1988. OCLC 16986801. http://archive.rubicon-foundation.org/6016. பார்த்த நாள்: 2008-07-13. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகஸ்டஸ்_சீபே&oldid=1882400" இருந்து மீள்விக்கப்பட்டது