ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2
ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2 | |
---|---|
குறுந்தட்டு அட்டை | |
இயக்கம் | ஸ்டீவன் ஆர். மொன்ரோ |
தயாரிப்பு | லிசா ம. ஹன்சென் பால் ஹர்ஸ்பெர்க் Executive: மெய்ர் சார்ச்சி |
கதை | Neil Elman தாமஸ் ஹச். பென்டன் |
இசை | கோரி அல்லன் ஜாக்சன் |
நடிப்பு | ஜெம்மா டல்லேந்தர் |
ஒளிப்பதிவு | தமியன் ப்ரோம்லே |
கலையகம் | சினிடெல் பிளிம்ஸ் |
விநியோகம் | ஆன்சர் பே பிளிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 25, 2013(Film4 FrightFest) செப்டம்பர் 20, 2013 (United States) |
ஓட்டம் | 106 நிமிடங்கள் 100 நிமிடங்கள்[1] (Edited cut) |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் பல்காரியா |
மொத்த வருவாய் | $809[2] |
ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2 2013ல் வெளிவந்த அமெரிக்க வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படமாகும். இதனை ஸ்டீவன் ஆர். மொன்ரோ இயக்கியிருந்தார். இப்படம் 1978ல் வெளிவந்த ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் மற்றும் 2010ல் வெளிவந்த ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது.
இத்திரைப்படங்களுக்கு இருக்கும் தொடர்பானது கதையின் சாரமும், பெயரும் மட்டுமேயாகும். ஒரு இளம் பெண் குழுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, அவள் அதிலிருந்து தப்பி,. தன்னை வன்புணர்வு செய்தவர்களை பலிவாங்குதலே கதைகளம் ஆகும்.
கதை
[தொகு]மிசூரி நகரத்தினைச் சேர்ந்த கேட்டீ எனும் பெண்மணி நியூயார்க் நகரில் உள்ள உணவுவிடுதியொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இலவச போட்டோகிராபி விளம்பரத்தினைக் கண்டு, அவ்விடம் செல்கிறார். அங்கு இவான், ஜார்ஜி மற்றும் நிகோலாய் என்ற மூன்று பல்கேரிய நபர்களை சந்திக்கின்றார். புகைப்படக்காரரான இவான், கேட்டீயை அரைநிர்வாணமாக புகைப்படம் எடுக்க வற்புருத்துகிறார், அதனை மறுத்த கேட்டீ அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அச்சம்பவத்திற்குப் பின்பு கேட்டீயின் அறைக்கு வந்து ஜார்ஜி, இவான் எடுத்த படங்களை தருகிறார்.
கேட்டீயின் மீது ஆசை கொண்ட ஜார்ஜி மீண்டும் அவளின் வீட்டிற்கு சென்று வன்புணர்வு செய்ய கொடுமைப்படுத்துகிறான். அந்நேரத்தில் சத்தம் கேட்டு வந்த பக்கத்து அறைக்காரரான ஜேய்சன்னையும் கொன்று, கேட்டீயை வன்புணர்வு செய்கிறான். அதன்பின்பு சுயநினைவு வந்து தன்சகோதரர்களை கேட்டீயின் வீட்டிற்கு அழைக்கிறான். இவான் நடந்தை அறிந்து தன் சகோதரனைக் காப்பாற்ற ஜேய்சனை கொன்றது கேட்டீ என்பதைப் போல சித்தரிக்க ஆயுதங்களில் கேட்டீன் கை ரேகையைப் பதிக்கிறான். பின் கேட்டீயை போதைமருந்தினை உட்கொள்ளும் படி செய்து அங்கிருந்து பல்கேரியாவிற்கு கடத்திச் செல்கிறார்கள்.
இவற்றையும் காண்க
[தொகு]- ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ்
- ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (2010 திரைப்படம்)
- வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BBFC
- ↑ பாக்சு ஆபிசு மோசோவில் ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2 Retrieved October 13, 2013
வெளி இணைப்புகள்
[தொகு]- 2013 ஆங்கிலத் திரைப்படங்கள்
- 2013 திகில் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க திகில் திரைப்படங்கள்
- அமெரிக்க குற்றவியல் திகில் திரைப்படங்கள்
- ஆங்கில மொழி திரைப்படங்கள்
- பல்காரியாவின் மொழி திரைப்படங்கள்
- பெண்ணியத் திரைப்படங்கள்
- பல்காரியாவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
- நியூயார்க்கில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
- தகாதப்புணர்ச்சி திரைப்படங்கள்
- வன்புணர்வு மற்றும் பழிவாங்கும் திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்