ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (1978 திரைப்படம்)
ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் | |
---|---|
![]() ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மேரி சார்ச்சி |
தயாரிப்பு | மேரி சார்ச்சி ஜோசப் ஜபேடா |
கதை | மேரி சார்ச்சி |
நடிப்பு | காமில் கீட்டன் எரொன் தாபோர் ரிச்சர்ட் பேஸ் |
படத்தொகுப்பு | மேரி சார்ச்சி ஸ்பிரோ கார்ராஸ்(re-edit) |
கலையகம் | சினிமேஜிக் பிச்சர்ஸ் |
விநியோகம் | சினிமேஜிக் |
வெளியீடு | நவம்பர் 22, 1978 |
ஓட்டம் | 101 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $650,000 |
ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 1978ல் அமெரிக்காவில் வெளிவந்த வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படமாகும். இப்படத்தின் தயாரிப்பு, இயக்கம், எழுத்து என மூன்று வேலைகளையும் மேரி சார்ச்சி ஏற்றிருந்தார். இவருடன் ஜோசப் ஜபேடா இணைந்து தயாரித்திருந்தார். திரையுலக விமர்சகர்கள் இதனை வன்முறை மற்றும் குழு பாலியல்வல்லுறவு மிகுந்த திரைப்படம் என்பதால் எதிர்ப்பினை தெரிவித்தார்கள். 2010ல் முதல் 10 வன்முறை நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாக டைம் (இதழ்) குறிப்பிட்டது.[1]
கதை[தொகு]
நியூயார்க் நகரத்தினை சேர்ந்த சிறுகதை எழுத்தாளரான ஜெனிப்பர் ஹில்ஸ், தனது முதல் நாவலை எழுதுவதற்காக ஏரியால் சூழப்பட்ட ஒரு குடிலை வாடகைக்கு எடுக்கிறார். அங்கு செல்லும் வழியில் உள்ள எரிவாயு நிலையத்தில், அதன் மேலாளர் ஜானி மற்றும் ஸ்டான்லி ஆண்டி ஆகியோர் கவனத்தினை ஜெனிப்பர் ஈர்க்கிறார். மேத்யூ என்ற மனநலம் குன்றிய நபரிடம் மளிகைப் பொருள்களை பெறுகிறார் ஜெனிப்பர். மூன்று நபர்களின் நண்பரான மேத்தியு ஒரு அழகானப் பெண் தனிமையில் இருப்பதை அவர்களிடம் தெரிவிக்கிறார்.
நடிகர்கள்[தொகு]
- மேரி சார்ச்சி - ஜெனிப்பர் ஹில்ஸ்
- எரொன் தாபோர் - ஜானி
- ரிச்சர்ட் பேஸ் - மேத்யூ
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Top 10 Ridiculously Violent Movies". Time. 3 September 2010. Archived from the original on 28 அக்டோபர் 2011. https://web.archive.org/web/20111028173143/http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2015869,00.html.
வெளி இணைப்புகள்[தொகு]
- எழுத்தாளர் பற்றிய திரைப்படங்கள்
- 1978 திரைப்படங்கள்
- 1978 திகில் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- அமெரிக்க திகில் திரைப்படங்கள்
- அமெரிக்க குற்றவியல் திகில் திரைப்படங்கள்
- பெண்ணியத் திரைப்படங்கள்
- தகாதப்புணர்ச்சி திரைப்படங்கள்
- வன்புணர்வு மற்றும் பழிவாங்கும் திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்