உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ சா த டெவில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ சா த டெவில்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிம் ஜீ-வூண்
தயாரிப்புகிம் ஜீ-வூண்
ஜோ ச4ங் வோன்
கிம் ஜி யங்
கிம் ஜங் ஹவ
இசைமௌக்
நடிப்புலீ ப்யுங்க் - ஹன்
சோய் மின் -சிக்
ஒளிப்பதிவுலீ மோ-கே
படத்தொகுப்புநாம் ந யங்
கலையகம்சோபாகஸ்/மீடியாபிளக்ஸ்
விநியோகம்சோபாக்ஸ்/மீடியாபிளக்ஸ்
வெளியீடுஆகத்து 12, 2010 (2010-08-12)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுதெற்கு கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவு$6 மில்லியன்[1]
மொத்த வருவாய்$12,773,990[2]

ஐ சா த டெவில் திரைப்படம் 2010ல் தெற்கு கொரியாவில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் கிம் ஜீ-வூண் . இத்திரைப்படம் 2011 சன்டேன்ஸ் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது.

கதை சுருக்கம்

[தொகு]

தன்னுடைய மனைவியை கொடூரமாக கொன்றவனை கணவன் தேடிக் கண்டுப்பிடித்து பழிவாங்குவதே இத்திரைப்படமாகும்.

கதை

[தொகு]

பனிக்கால இரவொன்றில் ஜோ-யான் என்ற பெண்மணி தன்னுடைய காரின் சக்கரமொன்று காற்றிரங்கி இருப்பதால் தனித்திருக்கிறார். அவ்வழியாக வரும் மஞ்சல் நிற பள்ளி வாகனத்தின் ஓட்டுனரான க்யுங் - சுல் அவளுக்கு உதவி செய்ய முன் வருகிறார். ஆனால் பனியில் சக்கரம் உரைந்துவிட்டதாகவும், தற்போது சக்கரத்தினை மாற்ற வழியில்லை என்று கூறிய க்யுங்-சுல் அவளை சுத்தியால் அடித்து மயக்கம் கொள்ளச் செய்கிறார். அதன் பின் தன்னுடைய வீட்டில் அவளை துண்டுதுண்டாக வெட்ட முற்படுகிறான். அவள் தன்னை கொல்லவேண்டாமெனவும், தான் தன்னுடைய வயிற்றில் சிசுவொன்று இருப்பதாகவும் கெஞ்சுகிறாள். ஆனால் அதைப் பெருட்படுததாது, க்யுங் அவளை கொன்றுவிடுகிறான். ஒரு சிறுவன் ஆற்றுப் பாலத்தின் அடியில் ஜோ-யானின் காதுகள் இருப்பதைக் கண்டு காவல்துறையை அழைக்கிறான். இரவுநேரத்தில் ஆற்றில் தடங்களைத் தேடுகின்ற காவல்துறைக்கு ஜோ-யானின் தனியாக வெட்டப்பட்ட தலை கிடைக்கிறது. அதனைக் கண்டு அவளின் கணவனும் (சூ ஹியூன்), தேசிய புலனாய்வு சேவையில் அணிதலைவராக பணிபுரியும் அவளின் தகப்பனும் (ஜாங்) மிகவும் வருந்துகிறார்கள்.

கொலைக்கு காரணமானவர்கள் என்று சந்தேகப்படும் நான்கு நபர்களையும் தேடி சூ ஹியூன் செல்கிறார். அதில் க்யுங்-சுல் வீட்டில் தன் மனைவின் திருமண மோதிரம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். தனது நண்பனின் உதவியால் கிடைக்கும் தேசிய புலனாய்வு சேவை அலைபரப்பியை உபயோகம் செய்து க்யுங் - சுல் செல்லும் இடங்களைப் பின்தொடர்கிறார். க்யுங் - சுல் எப்போதெல்லாம் பெண்ணுடன் உறவுகொள்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர்முன்வந்து தாக்குகிறார். இதனைத் தொடர்ந்து க்யுங்-சுல் நண்பனின் வீட்டிற்கு சென்ற இரவு, தன்னை பின்தொடரும் சூ ஹியூன் யாரென்றும், அவர் வைத்த தன்னுள் வைத்த அலைபரப்பியையும் கண்டுபிடிக்கின்றார்.

அதன்பின்பு க்யுங்-சுல், ஜோ-யானின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தையையும், சகோதரியையும் கொன்றுவிடுகிறார். இதனையறிந்து சூ ஹியூன் கோபம் கொள்வான் என்பதை உணர்ந்த க்யுங்-சுல் காவல்துறையில் சரணடைய வருகிறார். ஆனால் அதற்குள் சூ ஹியூன் அவரை கடத்தி சென்று தன்னுடைய மனைவியை க்யுங்-சுல் கொன்ற இடத்திலேயே குய்ல்லோடைன் எனப்படும் தலையை வெட்டும் இயந்திரத்தினை அவருடன் பொருத்துகிறார். தன்னை மன்னித்துவிடும்படி க்யுங்-சுல் கோரியும் அவரை மன்னிக்காது வெளியேரி சாலையில் நடந்து செல்கிறார். அப்போது க்யுங்-சுலின் தாயும், தந்தையும் மகனும் அங்கே வந்து கதவினை திறக்க முயலுகிறார்கள், க்யுங்-சுல் தலைவெட்டப்பட்டு மடிகிறார்.

வெளியீடு

[தொகு]

ஐ சா த டெவில் திரைப்படம் ஆகஸ்டு 12, 2010ல் வெளிவந்தது. இத்திரைப்படம் 2011 சன்டேன்ஸ் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது. அத்துடன் எண்ணற்ற உலகாலாவிய திரைப்பட விழாக்களிலும் பங்கேற்றது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.screened.com/i-saw-the-devil/16-198531/
  2. "Boxofficemojo". Boxofficemojo. Retrieved March 04, 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_சா_த_டெவில்_(திரைப்படம்)&oldid=3132330" இலிருந்து மீள்விக்கப்பட்டது