ஐ. ஞானதாசன்
ஐ. ஞானதாசன் (ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்)பிசி | |
|---|---|
| பிறப்பு | சாவகச்சேரி |
| படித்த கல்வி நிறுவனங்கள் | டிரிபெர்க் கல்லூரி ,ஹார்ட்லி கல்லூரி ,யாழ்ப்பாணக் கல்லூரி,இலங்கை சட்டக் கல்லூரி,மேற்கு இந்தியப் பல்கலைக்கழகம் |
| பணி | வழக்கறிஞர் |
ஐ. ஞானதாசன் (A.Gnanathasan)(ஐயத்துரை ஞானதாசன்) இலங்கையின் முன்னணி தமிழ் சட்டத்தரணியும், சனாதிபதியின் சட்ட ஆலோசகரும் ,அரசுத் தலைமை வழக்குரைஞரும் ஆவார்.
துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்
[தொகு]ஞானதாசன் வடக்கு இலங்கையில் உள்ள சாவகச்சேரியில் பிறந்தார்.[1][2] இவர் திரிபெர்க் கல்லூரியின் பிரதி முதல்வர் வி. என். ஐயத்துரை, திரிபெர்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பி. ஐயத்துரை ஆகியோரின் மகன் ஆவார்.[1][2] இவர் திரிபெர்க் கல்லூரி, ஹார்ட்லி கல்லூரி , யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, சட்டத்தரணியாகத் தகுதி பெற்றார்.[2] கல்லூரியில், இவர் 1978 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் "நீதிமன்றத்தில் உரையாற்றுவதற்கான சர் பொன்னம்பலம் இராமநாதன் தங்கப் பதக்கத்தை" வென்றார்.[2]
தொழில்
[தொகு]1980ல் வழக்கறிஞராகப் பதிவு பெற்ற பிறகு, ஞானதாசன் சனாதிபதி சட்ட ஆலோசகர் ஏ. மகேந்திரராஜாவின் அறைகளில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.[1][2] இவர் சிவநாதன் சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.[1][2] பின்னர் இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்ட ஆலோசகராக சேர்ந்தார்.[1][2] இவர் இலங்கையின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புகழ்பெற்ற "பாலவி கொலை" வழக்கிலும், மட்டக்களப்பில் நடந்த "அம்பாறை அழகி வழக்கிலும்" பணியாற்றினார்.[2]
ஞானதாசன் 1 சூலை 1992 அன்று ஐக்கிய இராச்சியத்தில் சட்ட ஆலோசகராகத் தகுதி பெற்று ராஜா சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.[1][2] இவர் 11 ஏப்ரல் 1994 அன்று தசுமேனியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (பாரிஸ்டர் மற்றும் சொலிசிட்டர்) சேர்க்கப்பட்டார்.[1][2] இவர் 2 மே 1994 அன்று நியூ சவுத் வேல்சு உச்ச நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக சேர்க்கப்பட்டார்.[1][2]
இலங்கையில், ஞானதாசன் 1995இல் மூத்த அரச சட்ட ஆலோசகராகவும், 14 சூலை 1999இல் பிரதி அரசு தலைமை வழக்கறிஞராகவும், 30 ஏப்ரல் 2008இல் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராகவும் ஆனார்.[1][2][3]
ஞானதாசன் 1995 முதல் 2007 வரை இலங்கை சட்டக் கல்லூரியில் குற்றவியல் சட்டத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார். மேலும் இக்கல்லூரியில் தேர்வாளர்கள் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1][2] இவர் 1998இல் நாடுகளின் பொதுநலவாயம் உதவித்தொகையைப் பெற்ற பிறகு மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[1][2] இவர் 2003 முதல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் வருகை விரிவுரையாளராகவும் தேர்வாளராகவும் இருந்து வருகிறார்.[1][2] இவர் 9 மார்ச் 2009 அன்று சனாதிபதியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[1][2]
ஞானதாசன் 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். 2002 முதல் 2006 வரை இதன் தலைவராகப் பணியாற்றினார்.[2] இவர் 2000ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு கிளை) துணைத் தலைவராகவும், 1999 முதல் 2007 வரை ஹரித்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Maniccavasgar, Chelvatamby (8 March 2009). "Add. Solicitor General to take silk as PC". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/090308/Plus/sundaytimesplus_18.html.
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 Maniccavasgar, Chelvatamby (5 March 2009). "A. Gnanathasan takes Silk as President's Counsel". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 10 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310043435/http://www.dailynews.lk/2009/03/05/news25.asp.
- ↑ "Law Officers". Attorney-General's Department (Sri Lanka). Archived from the original on 2013-06-22. Retrieved 2013-05-26.