உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ. சாந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ. சாந்தன்
பிறப்புமானிப்பாய், சுதுமலை
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், ஆங்கிலமொழி ஆசிரியர், குடிசார் பொறியியலாளர், குடிசார் பொறியியல் விரிவுரையாளர்

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில இலக்கிய முதுகலைமாணி, சூழல் முகாமைத்துவ முதுவிஞ்ஞானமாணி. சிறந்த தொழில் நுட்பவியல் விரிவுரையாளர் மற்றும்,ஆங்கில ஆசிரியர்.

கலைப் பங்களிப்பு[தொகு]

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார்.

இவரது நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

 • பார்வை - யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
 • கடுகு - 1975
 • ஒரே ஒரு ஊரிலே - சாகித்யமண்டலப் பரிசு பெற்றது - 1975
 • முளைகள் - என்.சி.பி.எச், சென்னை - 1982
 • கிருஷ்ணன் தூது - இலக்கியத்தேடல் வெளியீடு, பாளையங்கோட்டை - 1982
 • இன்னொரு வெண்ணிரவு - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1988
 • காலங்கள் - வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1994
 • யாழ் இனிது - கோரி வெளியீடு, சென்னை - 1998
 • ஒரு பிடி மண் - நர்மதா‎, சென்னை - 1999
 • எழுதப்பட்ட அத்தியாயங்கள் - மல்லிகைப் பந்தல், கொழும்பு - 2001
 • சாந்தனின் எழுத்துலகம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2006
 • சிட்டுக்குருவி - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2014
 • என் முதல் வாத்து (மொழிபெயர்ப்புக் கதைகள்) -கொடகே பிரசுராலயம், கொழும்பு. 2016

புதினங்கள்[தொகு]

 • ஒட்டுமா - வரதர் வெளியீடு - 1978[1]
 • ஆரைகள் (இரு நெடுங்கதைகள்) - ரஜனி பிரசுரம், யாழ்ப்பாணம் - 1985
 • பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் (Journey to the centre of the Earth - Jules Verne) - மொழிபெயர்ப்பு ) - யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழக வெளியீடு - 2006
 • விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்) - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2007

கட்டுரை நூல்கள்[தொகு]

 • ஒளி சிறந்த நாட்டிலே (சோவியத் பயணநூல்) - ஈழமுரசு வெளியீட்டகம், யாழ்ப்பாணம் - 1985
 • இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் - மூன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு - 2005
 • காட்டு வெளியிடை (கென்யப் பயணநூல்) - இருவாட்சி, சென்னை - 2007
 • உள்ளங்கையில் உலக இலக்கியம் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்‎, சென்னை - 2010

ஆங்கில நூல்கள்[தொகு]

 • The Sparks (Collection of short stories) - 1990[2]
 • In Their Own Worlds[2] (Collection of short stories - State literary Award winner) - Godage Bros. Colombo - 2000
 • Survival and Simple Things (Prose poems) - 2002
 • The Northern Front[2] (Collection of short stories) - Godage Bros. Colombo
 • The Whirlwind[2] (Novel - Gratiaen Short Listed) - VUS Pathippagam, Chennai - 2010
 • Rails Run Parallel (Novel - Gratiaen Short Listed, Fairway Best Novel Award & Godage Best Novel Award) - Paw Print Publishers, Colombo[3] - 2015
 • Minissu Saha Minissu (Stories in Sinhala Translation) - Godage Bros. Colombo - 1999

விருதுகள்[தொகு]

 • இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - ஒரே ஒரு ஊரிலே - 1975
 • முதல் பரிசு - இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டி - 1982
 • State literary Award - In Their Own Worlds - 2000
 • Gratiaen (Short Listed) - The Whirlwind - 2010
 • Gratiaen (Short Listed) - Rails Run Parallel - 2014
 • Fairway Best Novel Award - Rails Run Parallel - 2015
 • Godage Best Novel Award - Rails Run Parallel - 2015
 • சாகித்திய ஸ்ரீ விருது - India Intercontinental Cultural Association - 2016
 • வாழ்நாள் சாதனையாளர் விருது (கொடகே தேசிய சாகித்திய விருது, 2017)
தளத்தில்
ஐ. சாந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "ஒட்டுமா", Goodreads (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-24
 2. 2.0 2.1 2.2 2.3 "Ayathurai Santhan". Galle Literary Festival. Archived from the original on 22 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 09 August 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. Lynn Ockersz (2 செப்டம்பர்). "The 'Star-crossed' lovers of post-'77 Lanka". தி ஐலண்டு. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._சாந்தன்&oldid=4022372" இலிருந்து மீள்விக்கப்பட்டது