உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ. எக்ஸ். பெரைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்னேசியஸ் சேவியர் பெரைரா
I. X. Pereira
1934 இல் ஐ. எக்ஸ். பெரெய்ரா
திவான் பகதூர்
பதில் தொழில் அமைச்சர்
பதவியில்
29 சனவரி 1945 – 14 ஏப்ரல் 1945
முன்னையவர்ஜி. சி. எஸ். கொரியா
பின்னவர்ஜி. சி. எஸ். கொரியா
இலங்கை அரசாங்க சபையின் மலையக உறுப்பினர்
பதவியில்
1931–1947
இலங்கை சட்டவாக்கப் பேரவை மலையக உறுப்பினர்
பதவியில்
செப்டம்பர் 27, 1924 – 1931
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இக்னேசியசு சேவியர் பெரைரா

(1888-04-26)26 ஏப்ரல் 1888
தூத்துக்குடி, பிரித்தானிய இந்தியா
இறப்பு24 சூலை 1951(1951-07-24) (அகவை 63)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
துணைவர்மார்கரெட் பெரெய்ரா
பெற்றோர்எஃப். எக்ஸ். பெரைரா
தொழில்அரசியல்வாதி

திவான்பகதூர் செவாலியே இக்னேசியசு சேவியர் பெரைரா (I. X. Pereira, ஏப்ரல் 26, 1888 - சூலை 24, 1951) இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். 1924 முதல் 23 ஆண்டுகள் அரசியல் பணியாற்றியவர். பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றியவர். கப்பல் வணிகத்துறையில் கவனம் செலுத்தியவர்.[1] இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவான முதலாவது மலையக இந்தியத் தமிழர் இவரே.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இந்தியாவில் தூத்துக்குடியில் பரதவர் குலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் எஃப். எக்ஸ். பெரைரா என்ற தொழிலதிபருக்கு மகனாகப் பிறந்தார் இக்னேசியசு பெரைரா. 1889 இல் குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.[2] தந்தை மும்பை நகரில் "சிந்தியா ஸ்டீம் நேவிகேசன்" என்ற பெயரில் இயங்கிய கப்பல் நிறுவனத்தின் முகவராகவும் ஈடுபட்டு வந்தார்.[2] தந்தை கொழும்பு நகரில் புறக்கோட்டையில் முதலாம் குறுக்குத் தெருவில் எஃப்.எக்சு.பெரெய்ரா அன்ட் சன்சு என்ற பெயரில் ஒரு பல்-பொருள் அங்காடியை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1905 மார்ச் மாதத்தில் தந்தை இறந்ததும், அவரது நிறுவனங்களை அவரது மூத்த மகன் இக்னேசியசு பெரைரா எடுத்து நடத்தினார்.[3] தனது வணிகத்தை காப்பீடு, மற்றும் கப்பல் முகவர் பணிகளுக்கும் விரிவடையச் செய்தார்.[2][4] இவருக்கு ஒன்பது பிள்ளைகள்.[4] இவரது ஒரு மகன் ஜோசப் ஆகஸ்டின் பெரைரா இலங்கை மூதவை உறுப்பினராக இருந்தவர்.[5]

அரசியலில்

[தொகு]

1924 செப்டம்பர் 27 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் இந்திய மலையகத் தமிழரின் முதலாவது உறுப்பினராக 5,141 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][6] ஏழாண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர் 1931 இல் இலங்கை அரசாங்க சபைக்கு நியமிக்கப்பட்டார். 1936 அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1947-ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.[1]

அன்றைய தொழிலமைச்சராக இருந்த ஐ. சி. எஸ். கொரியா வெளிநாடு சென்றிருந்த வேளையில் 1945 சனவரி 29 முதல் 1945 ஏப்ரல் 14 வரை பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றினார்.[1]

பட்டங்களும் நினைவுகளும்

[தொகு]
  • 1934 சனவரி 1 இல் அப்போதைய இந்தியாவின் ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு இவருக்கு "திவான் பகதூர்" பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.[1]
  • இவரது நூற்றாண்டு நினைவாக, 1988 ஏப்ரல் 26 இல் இலங்கை அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.[7]
  • 1988 இல் கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள புட்ச்சர்சு வீதிக்கு இவரது நினைவாக "ஐ.எக்ஸ்.பெரெய்ரா வீதி" எனப் பெயர் சூட்டப்பட்டது.[4]

சமூகப் பணிகள்

[தொகு]

பெரி. சுந்தரத்துடன் இணைந்து மத்திய இந்தியர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.[8] சமய, சமூகத் துறைகளில் அதிக கவனம் காட்டினார். இலங்கை கிராமியக் குழுக்கள் தேர்தல்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1938 ஆம் ஆண்டில் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அரசாங்க சபையில் குரல் கொடுத்தார்.[9]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "இக்னேசியஸ் சேவியர் பெரைரா". கொழுந்து (2): பக். 2. சனவரி 1989. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1989.01. பார்த்த நாள்: 2016-06-19. 
  2. 2.0 2.1 2.2 "Augustine Pereira - 50 years in business". டெய்லி நியூஸ். 11 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Twentieth Century Impressions of Ceylon".
  4. 4.0 4.1 4.2 "A bond that grew from courting days on the tennis court". சண்டே டைம்சு. 25 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
  5. "Appreciatuion". சண்டே லீடர். 30 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
  6. The Ferguson's Ceylon Directory. 1925. பக். பக். 510. http://www.historyofceylontea.com/Fergusons/view/11. 
  7. "Sri Lanka - 100th Anniversary of the Birth of Chevalier I. X. Pereira issue (#56287) - StampData". பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
  8. ""இலங்கை இந்திய காங்கிரசாக" உருமாறிய அமைப்புகள் - நமது மலையகம்". பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
  9. ""தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை" 1939 வீரகேசரி தலைப்பு - நமது மலையகம்". பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எக்ஸ்._பெரைரா&oldid=3236904" இலிருந்து மீள்விக்கப்பட்டது