உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.என்.எஸ். காமோர்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.என்.எஸ். காமோர்த்தா சோதனை ஓட்டத்தின் பொழுது
கப்பல் (இந்தியா)  இந்தியக் கடற்படை
பெயர்: ஐ.என்.எஸ். காமோர்த்தா (பி28)
நினைவாகப் பெயரிடப்பட்டது: காமோர்த்தா தீவுகள், நிகோபார்
இயக்குனர்: இந்தியக் கடற்படை
கட்டியோர்: கார்டன்ரீச் ஷிப்பில்டர்ஸ் அன்ட் என்ஜினீயர்ஸ்
செலவு: 28 பில்லியன் (US$351 மில்லியன்)
துவக்கம்: 20 நவம்பர் 2006
வெளியீடு: 19 ஏப்ரல் 2010
வாங்கியது: 12 ஜூலை 2014
பணியமர்த்தம்: 23 ஆகஸ்ட் 2014 [1]
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:காமோர்த்தா வகுப்பு
பெயர்வு:3,500 டன் .[2]
நீளம்:109.1 மீ
வளை:13.7 மீ
உந்தல்:4 x 5096 குதிரை திறன் கொண்ட டீசல் என்ஜின்
விரைவு:32 கடல் மையில் வேகம்
பணிக்குழு:15 அதிகாரிகள் மற்றும் 180 மாலுமிகள்

ஐ.என்.எஸ். காமோர்த்தா என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலாகும். ஐ.என்.எஸ். காமோர்த்தா புதிய போர்க்கப்பலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் ஆகஸ்ட் 23, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியக் கப்பல் படைக்கு அர்பணித்தார்.

கப்பலின் சிறப்புகள்

[தொகு]

3500 டன் எடை கொண்ட ஐ. என். எஸ். காமோர்த்தா போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீரில் மிதந்து செல்வது மட்டுமின்றி, நீர் மூழ்கிக் கப்பல்களையும் கண்டறிந்து நீரில் மூழ்கித் தாக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக இந்தியாவிலேயே கட்டப்பட்டது. இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்ககுனரகம் உருவாக்கியுள்ளது. நான்கு 5096 குதிரைத் திறன் கொண்ட டீசல் என்ஜின்களை கொண்டு இயக்கப்படுகிறது. இதன் அதிகப்பட்ச வேகம் 25 கடல் மைல் (மணிக்கு 59 கி.மீ) ஆகும். இந்தக் கப்பலில் ஹெலிகாப்டரை இயக்கும் அணியை தவிர 180 கடல் மாலுமிகளும், 15 உயர் அதிகாரிகளும் பயணம் செய்யமுடியும். இந்தக் கப்பலில் 200 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை கண்டறியும் வகையில் அதிநவீன ரேவதி கண்காணிப்பு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த தொலைவுக்குச் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் ஆற்றல், இந்தப் போர்க்கப்பலுக்கு உண்டு. ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும் வசதி உள்ளது. [3] [4]. [5]

பெயர்காரணம்

[தொகு]

நிகோபார் தீவுகளில் உள்ள காமோர்த்தா என்ற தீவின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Times of India (2011-07-12). "Navy to commission two ships next month". http://timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/india/Navy-to-commission-two-ships-next-month/articleshow/38232147.cms. பார்த்த நாள்: 2014-07-13. 
  2. "Raksha Mantri to commission 'INS Kamorta'". Indian Navy. 20 Aug 2014.
  3. http://www.dailythanthi.com/News/India/2014/08/24030103/The-destroyer-INS-submarines-Kamortta-squadron-of.vpf
  4. [1] "ஐஎன்எஸ் கமோர்ட்டா” போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு
  5. http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6346657.ece?homepage=true

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.என்.எஸ்._காமோர்த்தா&oldid=3037135" இலிருந்து மீள்விக்கப்பட்டது