ஐ-பேடு மினி 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐ-பேட் மினி 4 ஆப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் கை கணினிகளில் நான்காம் தலைமுறையை சேர்ந்த கை கணினி ஆகும்.இக்கைகணினியை செப்டம்பர் 9, 2015 ல் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

வரலாறு[தொகு]

ஐ-பேட் மினி 4 கைக்கணினியை செப்டம்பர் 9, 2015ல் நடைபெற்ற ஆப்பிள்  நிறுவனத்தின் "Hey Siri" என்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அம்சங்கள்[தொகு]

மென்பொருள்[தொகு]

ஐ-பேட் மினி 4 கைக்கணினியில் iOS 9 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. iOS 9 இயங்குதளம் நிறுவப்பட்ட முதல் ஆப்பிள் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நேரத்தில் பல்பணி செய்யும் சிறப்பு அம்சம்  கொண்டதாக இந்த தொடுதிரை கைக்கணினி அமைந்துள்ளது.  

இக்கைக்கணினி iOS 9.1 இயங்குதளத்தை ஏற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [1]

வடிவமைப்பு[தொகு]

ஐ-பேட் மினி 4, இதன் முந்தைய பதிப்பான ஐ-பேட் மினி 2, 3 ஐ விட சிறிது உயரமாகவும், அகலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கைக்கணினி இதன் முந்தைய  பதிப்புகளை விட சிறிது எடை குறைவாக உள்ளது.

ஐ-பேட் மினி 4, சாம்பல், வெள்ளி , மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது.

References[தொகு]

  1. Clover, Juli (October 21, 2015). "Apple Releases iOS 9.1 With New Emoji, Live Photos Improvements". Mac Rumours. October 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.

2.https://www.apple.com/ipad-mini-4/

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-பேடு_மினி_4&oldid=2722729" இருந்து மீள்விக்கப்பட்டது