ஐஸ்வர்யா வாரியர்
ஐஸ்வர்யா வாரியர் | |
|---|---|
| பிறப்பு | ஐஸ்வர்யா மேனன் 29 சூன் 1975 கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், கலைக் கல்வியாளர் & ஆராய்ச்சியாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
| பெற்றோர் | முகுந்தன் மேனன் & ஸ்ரீபாலா மேனன் |
| வாழ்க்கைத் துணை | இராஜேஷ் வாரியர் |
| பிள்ளைகள் | சுகன்யா வாரியர் |
| வலைத்தளம் | |
| www | |
ஐஸ்வர்யா வாரியர் (Aishwarya Warrier) மோகினியாட்ட நடனக் கலைஞரும், கலை ஆசிரியரும், நடன இயக்குநரும் மற்றும் ஆராய்ச்சியாளரும் ஆவார்.[1][2]
இளமை வாழ்க்கை
[தொகு]கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்த ஐஸ்வர்யா மும்பையில் வளர்ந்தார். பின்னர் குசராத்தின் வடோதராவில் குடியேறினார். ஐந்து வயதில் தனது தாயார் ஸ்ரீபாலா மேனனால் இந்திய பாரம்பரிய நடனக் கலையில் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தையாக இருக்கும்போது, ஐஸ்வரியா ஒரு குரல் கலைஞராகவும் இருந்தார். இவரது தந்தை முகுந்தன் மேனன் இந்தியத் திரைப்படப் பிரிவில் பேச்சாளராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தார்.
பயிற்சி
[தொகு]பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் ஆகிய இரண்டு பாணிகளில் சுசேதா பைதே சாபேகர், உத்யோகமண்டல் விக்ரமன் மற்றும் கலாமண்டலம் சரசுவதி ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார். ஐஸ்வரியா மார்கி உஷாவிடமிருந்து நேத்ரபினாயாவின் சிறந்த அம்சங்களைக் கற்றுக்கொண்டார். மேலும் பத்ம பூசண்விருது பெற்ற காவாலம் நாராயண பணிக்கரின் கீழ் சோபன சங்கீதத்தில் வழிகாட்டலைப் பெற்றார்.[3][4] குசராத்தின் வடோதராவில் உள்ள நிருத்யோதயா பாரம்பரிய நடனப் பள்ளியின் கலை இயக்குநராகவும், மகாராட்டிராவின் நவி மும்பையில் உள்ள ஐஸ்வர்யா படைப்பாற்றல் வெளிப்பாடு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[5]
தொழில்
[தொகு]2019- 2021- ஐஸ்வர்யா வாரியர், வடோதராவின் பிராந்திய மையமான இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பிராந்திய இயக்குநராக இருந்தார்.[6] 2016 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற எழுத்தாளரும் இசைக்கலைஞருமான மாலி மாதவன் நாயரின் ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட "நீலிமா - நீலத்திற்கு அப்பால் .... ஒரு ஆய்வு" என்ற தலைப்பில் ஒரு மோகினியாட்ட நடனப் படத்தை இயக்கி தயாரித்தார்.[7][8]
குறிப்பிடத்தக்க நடன நிகழ்ச்சிகள்
[தொகு]இந்தோ பூடான் நட்புறவு - 50 ஆண்டு கொண்டாட்டங்கள் (பூடானுக்கு இந்தியக் கலாச்சார உறவுக் குழுவின் சுற்றுப்பயணம்),[9] தென் கொரியாவின் பஜு புத்தக விழா, ஐக்கிய அரபு அமீரகச் சூர்யா விழாச் சுற்றுப்பயணம் &, உருசியாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பிஸ்கோவில் இந்திய விழா (இந்தியக் கலாச்சார உறவுக் குழுவின் சுற்றுப்பயணம்).[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Engaging Mohiniyattam" (in en-IN). 2013-03-14. https://www.thehindu.com/features/friday-review/dance/engaging-mohiniyattam/article4508399.ece.
- ↑ "Charmed and beyond" (in en-IN). 2014-06-19. https://www.thehindu.com/features/friday-review/dance/charmed-and-beyond/article6129825.ece.
- ↑ Kannan, Arathi (2016-12-24). "Retelling 'her' stories through Mohiniyattam". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-18.
- ↑ Kannan, Arathi (2017-04-01). "Beyond the blue yonder". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-18.
- ↑ Backer, Anila (2015-11-07). "Spreading the Grace of Mohiniyattom". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-18.
- ↑ "When poetry, drama and dance are in sync". The Times of India. 2008-11-10. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/when-poetry-drama-and-dance-are-in-sync/articleshow/3692599.cms.
- ↑ "ഒരു നിയോഗമായി 'നീലിമ'; മാലിയുടെ അപ്രകാശിത കവിതയും ഐശ്വര്യ വാരിയരുടെ നൃത്തഭാഷ്യവും". www.manoramaonline.com (in மலையாளம்). Retrieved 2024-05-18.
- ↑ Pradeep, K. (2017-04-06). "Where verse meets dance" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/mohiniyattam-danseuse-aiswarya-wariar-talks-about-her-dance-film-nilima/article17843115.ece.
- ↑ 9.0 9.1 DHNS. "The expressions conveyed it all". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-05-18.