ஐஸ்லாந்து திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐஸ்லாந்து திரைப்படத்துறை
Cinema of Iceland
திரைகளின் எண்ணிக்கை38 (2010)[1]
 • தனிநபருக்கு100,000 பேருக்கு 13.4 (2010)[1]
முதன்மை வழங்குநர்கள்சாம்ஃபிளிமா 38.0%
சினா 32.0%
மைண்ட்ஃபார்ம் 29.0%[2]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2011)[3]
புனைவு9
அசைவூட்டம்1
ஆவணப்படம்3
Number of admissions (2011)[5]
மொத்தம்1,514,000
 • தனி நபருக்கு5.4 (2010)[4]
நிகர நுழைவு வருமானம் (2011)[5]
மொத்தம்ISK 1.49 பில்லியன்

ஐசுலாந்தில் திரைப்படத் துறையானது குறிப்படத்துக்க தொழிலாக உள்ளது.

வரலாறு[தொகு]

1980ல் ஐசுலாந்து தனக்கெனத் தனித் திரைத் துறையை நிறுவியது. 1966இல் இங்குத் தோற்றுவிக்கப்பட்ட தேசியத் தொலைக்காட்சி நிலையமானது ஐஸ்லாந்தின் திரைப்படத்துறைக்கு ஊக்கமாக அமைந்தது. அதே ஆண்டு இங்குத் தொடங்கப்பட்ட இயக்குநர்கள் சங்கமானது, திரையுலகம் சார்ந்த பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியது. அதில் பயிற்சிபெற்ற ஐஸ்லாந்து நடிகர்களில் பலர், பிறகு ஹாலிவுட்டில் புகழ்பெற்றனர். அதேநேரம் ஐஸ்லாந்துக்கு வெளியே திரைக்கல்வி பயின்று சொந்த நாடு திரும்பிய புதுமுக இயக்குநர்கள், உத்வேகத்துடன் 1970களில் ஐஸ்லாந்து நாட்டின் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இத்தகைய கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் விரைவில் உலகக் கவனத்தைப் பெறத் தொடங்கின. அவற்றில் ஒன்றாகவும், ஐசுலாந்து திரைப்படங்களில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படமாகவும், சிறந்த அயல்நாட்டு சினிமாவுக்கான அகாதமி விருது மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகள் ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே திரைப்படமான ஃப்ரைட்ரிக் றோர் ஃபிரெரிக்ஸ்சனால் இயக்கப்பட்ட, பரோன் நாட்டூரானர் (சில்ரன் ஆஃப் நேச்சர்) திரைப்படம் ஆகும். இந்தப் படத்திற்குப் பிறகு உலக திரைப்பட இரசிகர்களை ஐஸ்லாந்துத் திரைப்படங்கள் கவரத் தொடங்கின.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. பார்த்த நாள் 5 November 2013.
  2. "Table 6: Share of Top 3 distributors (Excel)". UNESCO Institute for Statistics. பார்த்த நாள் 5 November 2013.
  3. "Table 1: Feature Film Production - Genre/Method of Shooting". UNESCO Institute for Statistics. பார்த்த நாள் 5 November 2013.
  4. "Cinema - Admissions per capita". Screen Australia. மூல முகவரியிலிருந்து 9 November 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 November 2013.
  5. 5.0 5.1 "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. பார்த்த நாள் 5 November 2013.
  6. ம.சுசித்ரா (2018 நவம்பர் 9). "ஐஸ்லாந்து திரை விழா: உறைந்த தேசத்தின் சலனப் படங்கள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 20 திசம்பர் 2018.